Women Equality Day Movies : பெண்கள் சமத்துவ நாள்.. பெண் சமத்துவத்தை பேசிய 6 திரைப்படங்கள் இதோ..
Women Equality Day 2022 Movies:பெண்கள் சமத்துவத்தை பறைசாற்றிய சில படங்கள் பற்றிய தொகுப்பு இது.
சமூகத்தில் சம அந்ததஸ்தை பெறுவதற்காக அமெரிக்காவில் பெண்கள் கிளர்ந்தெழுந்து போராடி பெற்ற உரிமையின் வெற்றியை கொண்டாடும் தினமாகத்தான் ‘உலக பெண்கள் சமத்துவ தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. 1920 ஆம் ஆண்டு 26 ஆம் தேதி அமெரிக்க அரசியலமைப்பு பத்தொன்பதாம் திருத்தத்தைச் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்ட அந்த தினமே ‘உலக சமத்துவ தினம்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் நிலையில், பெண்கள் சமத்துவத்தை பற்றிய பேசிய சில திரைப்படங்களை பார்க்கலாம்.
ஆன் தி பேசிஸ் ஆஃப் செக்ஸ்
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இராண்டாவது பெண் நீதிபதியாக ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க் பதவியேற்றார். அடிப்படையிலேயே முற்போக்கு சிந்தனைகளை கொண்ட மக்கள் பாலின சமத்துவ அடிப்படையில் பேதமின்றி நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் கணவர் நல்ல வசதி வாய்ப்பு கொண்ட கணவனை பெற்றதனாலும், கல்லூரி பணி உள்ளிட்ட இடங்களில் பதவி நிலை தாழ்த்தப்பட்டதோடு, தகுதிக்கான ஊதியமும் வழங்கப்படாமல் இருந்தது. பாலின பேதத்தால் வாழ்கையில் கடுமையாக பாதிப்படைந்த அவர் நீதிபதியாக ஆற்றிய பணியிலும், அளித்த தீர்ப்புகளிலும் ஆண்பெண் பாலின பேதம் இல்லாமல் பார்த்துக்கொண்டார். இவரது வாழ்கையை அடிப்படையாக வைத்து உருவான திரைப்படம் தான் ‘ஆன் தி பேசிஸ் ஆஃப் செக்ஸ்’.
ஹிடன் ஃபிகர்ஸ்:
1960 களில் அமெரிக்காவில் இருந்த கறுப்பினத்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ஹிடன் ஃபிகர்ஸ். விண்வெளித்துறையில் சிறந்து விளங்கும் 3 கருப்பினப் பெண் விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கருவாக வைத்து வெளியான இந்தத்திரைப்படம் நாசாவின் கருப்பு பக்கத்தை தெளிவாக காட்டும் படமாகவும் அமைந்தது. ஆஸ்கரின் 89 ஆவது விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலிலும் இந்தப்படம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கன்ஃபர்மேஷன்
2016 ஆம் ஆண்டு Rick Famuyiw எழுதி, இயக்கி வெளியிட்ட திரைப்படம் கன்ஃபர்மேஷன். உச்ச நீதிமன்ற வேட்பு மனு விசாரணையின் போது கிளாரன்ஸ் தாமஸ் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அனிதா ஹில் கூறியதை அடுத்து எழுந்த சர்ச்சை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
தப்பட்
‘ஆர்டிக்கிள் 15’ படத்தை இயக்கிய அனுபவ் சின்ஹா இயக்கத்தில் தாப்ஸியின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தப்பட்’. பொதுவெளியில் பலரும் பார்க்க மனைவியை அறைந்த கணவரிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை.
சக்தே இந்தியா
இந்திய ஹாக்கி அணிக் கேப்டன் 'கபீர் கான்' பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒரு இறுதிப் போட்டியில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் கோல் அடிக்க தவறுகிறார். இதனால் அவர் துரோகியாக்கப்பட்டு அவரது வீடு தாக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பை போட்டிக்கான பயிற்சியாளாராகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. இழந்த பெருமையை அவர் மீட்டெடுத்தாரா இல்லையா என்பதுதான் கதை
நேர்கொண்ட பார்வை
ஒன்றாக வசித்து தோழிகள் மூவர் பார்டி ஒன்றிற்கு செல்கின்றனர். அப்போது இளைஞர் ஒருவர் அதில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள, அந்த இளைஞர் பீர் பாட்டிலால் தாக்கப்படுகிறார்.
இதனையடுத்து அந்தப் பெண்ணை பழிவாங்க துடிக்கும் அந்தக் கும்பல், சம்பந்தப்பட்ட பெண்ணை பழிவாங்க பொய்யான குற்றசாட்டை அவர் மீது வைக்கிறார். அவர்களுக்கு உதவ மனநிலை பாதிகப்பட்ட பிரபல வழக்கறிஞர் ஒருவர் களமிறங்கி காப்பாற்றுகிறார். இறுதியில் அவர் காப்பாற்றப்பட்டாரா இல்லையா என்பதே கதை.