(Source: Poll of Polls)
Baakiyalakshmi: அதே ரிசார்ட்.. அதே டெய்லர்... வெளியில் வருமா கோபியின் பித்தலாட்டம்?
கோபி ராதிகாவுடன் காரில் செல்வதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் எழில்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, மௌனராகம், ராஜா ராணி, பாக்யலெட்சுமி என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் கடந்த சில வாரங்களாக என்ன நடக்கப்போகிறது என மக்களை ஆவலுடன் பார்க்க வைத்து வருகிறது பாக்யலெட்சுமி சீரியல். அழகான குடும்பம் அன்பாக குழந்தைகள் என சென்றுகொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில், கணவன் எடுக்கும் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவுள்ளது.
இந்த சீரியலில் கோபி செய்யும் பித்தலாட்டம் எப்படியும் ஒரு நாள் தெரிந்துவிடும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில், ஒவ்வொரு முறையும் எப்படியோ தப்பித்து விடுகிறார். அதே நேரம் பாக்கியாவிற்கு கோபி மீது சின்ன சந்தேகம் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய எபிசோடில், சண்டை போட்டுக் கொண்ட ஜெனி மற்றும் செழியனிடம் கோபி போய் பேசுகிறார். அதுமட்டுமில்லை ஒரு தந்தையாக, குடும்ப தலைவனாக இருவருக்கும் அட்வைஸ் செய்கிறார். என்ன தான் ராதிகா, கல்யாணம் என சுற்றினாலும் கோபி இந்த விஷயத்தில் படு தெளிவு. பிள்ளைகளுக்கு சரியான தந்தையாக நடந்து கொள்வார். கோபி செய்த அட்வைஸை பற்றி ஜெனியும் செழியியனும் யோசிக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, இனியா ஃபேமலி ட்ரிப் பற்றி எழிலிடம் பேசுகிறார். வீட்டில் அடிக்கடி சண்டை வருவதால் மொத்த குடும்பமும் ஜாலியாக அவுட்டிங் போகலாம் என முடிவு எடுக்கின்றனர். அதற்காக கோபியையும் இனியா கூப்பிடுகிறார். அதே நாளில் தான் ராதிகா மற்றும் மயூவை பீட்ச் ரெசார்ட் அழைத்து செல்வதாக கோபி சொல்லி இருந்தார். அதனால் நாளைக்கு வர முடியாது என கூறுகிறார். ஆனால் இனியா, கோபியை விடுவதாக இல்லை, கண்டிப்பாக வந்தாக வேண்டும் என்கிறார். செல்ல மகளிடம் கோபியால் நோ சொல்ல முடியவில்லை. சரி ராதிகா மற்றும் மயூவிடம் பேசலாம் என ராதிகா வீட்டுக்கு செல்கிறார்.அவர்களும் கோபித்து கொள்கிறார்கள். கடைசியில், ராதிகா மற்றும் மயூவிடம் நாளைக்கு பீட்ச் ரெசார்ட் அழைத்து செல்வதாக சத்தியம் செய்து விடுகிறார்.
இந்நிலையில், பாக்கியா குடும்பமும் அதே பீட்ச் ரெசார்ட்டுக்கு தான் செல்க்ல போகிறார்கள். அங்கே கோபியும் ராதிகாவுடன் வருவார். கண்டிப்பாக கோபி தனது குடும்பத்தில் யாரிடமாவது மாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர் பாக்யா வந்த அதே ரிசார்ட்டுக்கு ராதிகா மயூவுடன் கோபியும் வருகிறார்கள். ஒரு பக்கம் பாக்யா, செல்வி, ஈஸ்வரி, மற்றும் அவருடைய கணவர் எல்லாரும் ஜாலியாக தங்கள் வெக்கேசனை கொண்டாடி கொண்டிருக்க, அவர்களுக்கு பின்னாடி ஒரு கடையில் கோபி, ராதிகா மற்றும் மயூ ஆகியோர் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கோபிக்கு பாக்யா, இனியா இதே ரெச்சாட்டில்தான் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைகிறார்.
உடனடியாக, ராதிகாவையும் மயூவையும் அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். கோபி காரில் இன்னொரு பெண்ணுடன் செல்வதை எழில் பார்த்து விட்டு, காரை துரத்துகிறார். இன்றைய எபிசோட்டில் என்ன நடக்க போகிறது என்று இந்த ப்ரோமோ பரபரப்பை அதிகரித்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்