”மெயின் ரோலுக்கு விஜய் ஓகே சொன்னாரு... ஆனால் அதே ரோலை அஜித் வேண்டாம்னு சொன்னாரு“ - இயக்குநர் ராஜகுமாரன்
”விஜய் என்னிடம் சொன்னார் , நான் வேணும்னா கெஸ்ட் ரோல்ல நடிக்குறேன்னு.”
கோலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராஜகுமாரன். விஜய் அஜித் உள்ளிட்ட நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும், நீ வருவாய் என பல படங்கள் இன்றைக்கும் பலருக்கு பிடித்தமான படங்களுள் ஒன்று. ராஜகுமரன் தேவையாணியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேவையானி நடிப்பில் ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியான நீ வருவாய் என திரைப்படத்தில் , விஜய் மற்றும் அஜித்தைதான் முதலில் ஒப்பந்தம் செய்ததாகவும் , அந்த வாய்ப்பு எப்படி மிஸ் ஆனது என்றும் ராஜகுமாரன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
அதில் "நீ வருவாய் என படத்திற்கு முதலில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் விஜயைத்தான் ஃபிக்ஸ் செய்து வைத்திருந்தேன். விக்ரமன் சார் என்னிடம் சொன்னார் சூப்பர் குட் ஃபிலிம்ஸிற்கு முதலில் படம் பண்ணுங்க அதுதான் உங்களுக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்றார். அந்த படத்தை முதலில் பண்ண போயிட்டேன். அதனால விஜய் அந்த படத்துல நடிக்க முடியாமல் போனது. விஜய் என்னிடம் சொன்னார், நான் வேணும்னா கெஸ்ட் ரோல்ல நடிக்குறேன்னு. அஜித் சார்க்கிட்ட நீங்க மெயின் ரோல்ல நடிங்க சார்னு கேட்டதற்கு இல்லை முடியாது. அது ராங்னு சொல்லிட்டாரு. மேலும் மோகன் மிகப்பெரிய நடிகர் , அவர் மௌனராகம் படத்துல ரேவதி அவரை நிராகரிப்பது போல நடிச்சாரு அதனால் மேற்க்கொண்டு அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கல. ஆனால் ரேவதி விரும்பியதால கார்த்திக், மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்தாருனு காரணம் சொன்னாரு. அதனால் நான் அப்படி நாயகி நிராகரிப்பது போல நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. அவர் அவ்வளவு ஆழமா சினிமாவை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறார். நமக்குதான் புரியலை. அதன் பிறகு விஜய் சார் பண்ணல , அதனால பார்த்திபன் சாரை ஒப்பந்தம் செய்து , கதையில ஒரு சின்ன சேஞ்ச் மட்டும் பண்ணிட்டு உருவாக்கினோம். நானும் அஜித்தும் உன்னிடத்தில் என்னை கொடுத்து திரைப்படத்தில் இருந்தே நல்ல நட்பு . அந்த அடிப்படையில்தான் நீ வருவாய் என பண்ணிக்கொடுத்தாரு“ என பகிர்ந்திருக்கிறார் ராஜகுமாரன்.