Prabhas : பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி...கேரள பேரிடருக்கு இதுவரை எவ்வளவு நிதி கிடைத்துள்ளது தெரியுமா?
பிரபல தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் தொடர்ந்து வயநாடில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக நடிகர் பிரபாஸ் 2 கோடி நிதி வழங்கியுள்ளார்.
வயநாடு நிலச்சரிவு
கடந்த ஜூலை 30 ஆம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 222 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் வயநாட்டில் உள்ள சூரமலை , முண்டக்கை , அட்டமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் முற்றிலுமாக துடைதெறியப் பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 37 குழந்தைகள் 88 பெண்கள். இதுவரை 172 உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் 206 நபர்களை கண்டுபிடிக்கும் தேடுதல் 7 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. 1500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த மீட்பு பணியில் ஓயாது உழைத்து வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைபிரபலங்கள் நிதியுதவி
இந்த பேரிடரில் இந்து மீள்வதற்கு கேரள அரசுக்கு பல்வேறு திரைத்துறையினர் நிதியுதவி வழங்கி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு சார்பாக முதல் ஐந்து கோடி நிதி அறிவிக்கப்பட்டதன் பின் நடிகர் விக்ரம் 20 லட்சம் நிதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் , சூர்யா , ஜோதிகா , கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் நிதி வழங்கினார்கள்.
மலையாள நடிகர்கள் மம்மூட்டி , துல்கர் சல்மான் , ஃபகத் ஃபாசில் , ஜெயராம் உள்ளிட்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள். நடிகர் மோகன்லால் நிலச்சரிவால் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு 3 கோடி ரூபாய் நிதி அறிவித்தார்.
பிரபாஸ் 2 கோடி நிதியுதவி
Rebel Star #Prabhas donated 2crs for #Kerala CM Relief Fund to help victims of #Wayanad Landslide..🤝 pic.twitter.com/c9J5ypScDa
— Laxmi Kanth (@iammoviebuff007) August 7, 2024
தமிழ் , மலையாள பிரபலங்களைத் தொடர்ந்து முன்னணி தெலுங்கு நடிகர்களும் கேரள மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார்கள். நடிகர் சீரஞ்சீவி மற்றும் நடிகர் ராம் சரண் இருவரும் இணைந்து ஒரு கோடி நிதி வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜூன் 25 லட்சம் நிதி வழங்கினார். தற்போது நடிகர் பிரபாஸ் தன் சார்பில் 2 கோடி நிதி கேரள அரசின் மீட்பு பணிகளுக்கு வழங்கியுள்ளார்.
எவ்வளவு நிதி திரட்டப்பட்டுள்ளது
திரைப்பிரபலங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு தன்னார்வல தொண்டு நிறுவனங்கள், சாமானிய மக்கள் தங்களால் முடிந்த சிறு தொகையை கேரள அரசிற்கு வழங்கி வருகிறார்கள். இதுவரை வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக 20 கோடி வரை நிதி திரட்டப்பட்டுள்ளதாக கேரள பேரிடம் மீட்பு நிதி இணையதளப் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணத்தை முறையாக நிதி ஆலோசகர்களுடன் கலந்து பேசி மீட்பு பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.