Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு: மீட்புபணிக்காக நடிகர் விக்ரம் நிதியுதவி அறிவிப்பு: எவ்வளவு தெரியுமா?
வயநாடு நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய நடிகர் விக்ரம் கேரள அரசுக்கு ரூபாய் 20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்
![Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு: மீட்புபணிக்காக நடிகர் விக்ரம் நிதியுதவி அறிவிப்பு: எவ்வளவு தெரியுமா? Wayanad Landslide Actor Vikram Donates Rs 20 Lakhs to Kerala Chief Minister Disaster Relief Fund Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு: மீட்புபணிக்காக நடிகர் விக்ரம் நிதியுதவி அறிவிப்பு: எவ்வளவு தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/31/ef01abc41e07a5d21dbf24ae91d2895a1722422280445572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வயநாடு நிலச்சரிவு
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஒட்டுமொத்த நாட்டையுமே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த நிலச்சரிவு காரணமாக இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிய 200-க்கு மேற்பட்டோர் பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் இந்த நிலச்சரிவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
20 லட்சம் வழங்கிய விக்ரம்
Pained by the sad news of the devastation caused by the recent landslide in Kerala's #Wayanad district that left over 150 people dead, 197 injured and several others missing, our @chiyaan today donated a sum of Rs 20 lakhs to the Kerala Chief Minister's Distress Relief Fund.… pic.twitter.com/1NkmSEnWKh
— Chiyaan Vikram Fans (@chiyaanCVF) July 31, 2024
வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பாக 5 கோடி நிதி கேரள அரசுக்கு வழங்கப்பட்டது. அரசு தவிர்த்து தற்போது நடிகர் விக்ரம் கேரள அரசுக்கு 20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். தான் நடித்துள்ள தங்கலான் படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் கேரளா சென்றிருந்தார். மால் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான கேரள ரசிகர்கள் திரண்டு நின்றார்கள். தனது ரசிகர்களுடன் உற்சாகமாக உரையாடிவிட்டு தமிழ்நாடு திரும்பினார் விக்ரம். இப்படியான நிலையில் கேரளத்தில் இத்தனை பெரிய இழப்பு அவரை தனிப்பட்ட அளவில் பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மலையாளம் தவிர்த்து பிற மொழி திரைப் பிரபலங்கள் மெளம் காக்கும் நிலையில் விக்ரம் முன்வந்து நிதி வழங்கியுள்ளது ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)