Watch Video : தாய்லாந்தில் தவெக மானத்தை வாங்கிய ரசிகர்கள்..பிரபல யூடியூபரை விரட்டி சென்ற வீடியோ வைரல்
தாய்லாந்தில் பிரபல யூடியூபர் ஸ்பீட் வ்ளாக் பதிவு செய்தபோது விஜய் ரசிகர்கள் அவரது காரை துரத்திச் சென்று தவெக கோஷமிட்டது வைரலாகி வருகிறது

கரூர் விபத்தைத் தொடர்ந்து விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கரூர் விபத்தைத் தொடர்ந்து விஜய் மீதும் அவரது கட்சித் தொண்டர்களின் பன்படாத நடத்தைகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இப்படியான நிலையில் தாய்லாந்தில் பிரபல யூடியூபரின் வீடியோவில் விஜய் ரசிகர்கள் செய்த செயல் வைரலாகி வருகிறது
யூடியூபர் ஸ்பீட் வீடியோவில் தவெக தொண்டர்கள்
பிரபல் யூடியூபரான ஸ்பீர் தாய்லாந்தில் தனது காரில் சென்றபடி வ்ளாக் பதிவிட்டு வந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் அவரை துரத்தி வந்த விஜய் ரசிகரக்ள் விஜய் தவெக என கத்தத் தொடங்கினர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என புரியாமல் ஸ்பீட் குழம்பிப்போனார். இருந்தும் விடாமல் அந்த இருவர் விஜய் இந்தியாவின் முதலமைச்சர் என ஏதேதோ உளறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
Famous American Youtuber Darren Watkins Jr got confused by the noise created by the Vijay fans in Thailand.
— Blue Sattai Maran (@tamiltalkies) October 22, 2025
Vijay fans: தளபதி...Chief minister of India.
Watkins: What is தலைவலி?
------------
அலப்பறைக்கு ஒரு அளவு இல்லையாடா?pic.twitter.com/nW8u6XZDFS
கரூர் விபத்தை விசாரிக்கும் சிபிஐ
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலால் ஏற்பட்ட துயரச்சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்து ஏற்பட்ட உடனே விஜய் சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை வந்து சேர்ந்தார். இதனால் விஜய் அவருக்கு ஆதரவாக பேசிய தவெக தொண்டர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. விபத்துக்குப் பிறகு, தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம் அக்டோபர் 13 அன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, சிபிஐயின் பிரவீன்குமார் ஐபிஎஸ் தலைமையிலான விசாரணைக் குழு கரூரில் முகாம் அமைத்துள்ளது. இவருடன் ஏடிஎஸ்பி முகேஷ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்துள்ளனர்.





















