Watch Video: ஆறுதல் கூறுவதற்கு காரில் சீறிய பவன் கல்யாண்...வீடியோவால் சர்ச்சை...ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்...
Watch Video: நடிகர் பவன் கல்யாண், காரின் மேலே அமர்ந்தப்படி நெடுஞ்சாலையில் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Watch Video: நடிகர் பவன் கல்யாண், காரின் மேலே அமர்ந்தப்படி நெடுஞ்சாலையில் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பவன் கல்யாண்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பவன்கல்யாண். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். கோலிவுட்டின் விஜய் மற்றும் அஜித்தைப் போல தெலுங்கின் ஓப்பனிங்கை அள்ளும் நாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தெலுங்கு திரையுலகின் பவர்ஸ்டார் என்று டோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஜனசேனா கட்சியின் தலைவராக அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பவன் கல்யாண் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது தமிழ் படங்களில் நடிக்கப் போவதாக சில கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
காரில் சீறிய பவன் கல்யாண்
இந்நிலையில், பவன் கல்யாண் நடிக்கும் தெலுங்கு படங்களில் இடம்பெறும் ஆக்ஸன் காட்சிகள் பெரும்பாலும் கிரிஞ்சாக தான் இருக்கும். இதனை பலரும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து மீம்ஸ்களும் போடப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் பவன் கல்யாண், ஆந்திரா மாநிலத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில் காரின் மேலே அமர்ந்தப்படி பயணம் செய்தார். அவர் காரின் மேலே அமர்ந்துக் கொண்டிருக்க, மேலும் பலர் அவர் காரை சுற்றி தொங்கியப்படி பயணித்தனர். அவர் செல்லும் காரை தொடர்ந்து அவரது ரசிகர்கள் என பலரும் பைக்கில் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். அவரது ஆதரவாளர்கள் கார் மற்றும் பைக்கில் அதிக வேகத்தில் பயணம் செய்ததோடு உற்சாகமாக கத்திக் கொண்டு வந்திருந்தனர்.
#JanaSena Chief #PawanKalyan with followers while reaching #IppatamVillage Guntur pic.twitter.com/lldHIF5DU1
— Nellutla Kavitha (@iamKavithaRao) November 5, 2022
ட்ரால் செய்யும் நெட்டிசன்கள்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராகியுள்ள நிலையில், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதை பலரும் ஷூட்டிக் வீடியோ என்று நினைத்து இணையத்தில் பகிர தொடங்கினார். ஆனால் அது ஷூட்டிக் வீடியோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சமீபத்தில் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பல வீடுகள் இடிக்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து, பவன் கல்யாணும் சம்பவ இடத்திற்கு பார்வையிடவும் அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் காரில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தான் இந்த வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த நெட்டிசன்கள் அவரை ட்ரால் செய்து வருகின்றனர். ஒரு கட்சியின் தலைவரே இதுபோன்ற சாலை விதிகளை மீறலாமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ இப்படி சென்று ஆறுதல் கூறுவதற்கு பதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தரலாம் என அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
Not against PK as a PK fan I am disappointed the way she is travelling he should set an example why we need to follow all rules even when all are against you.
— Sunny (@Sunny74240064) November 5, 2022
மேலும் சாலை விதிகளை மீறி ஆபத்தான முறையில் பயணித்த பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.