Watch Video: வைரலாகும் ஸ்னாப்ஸ்.. வைரலாகும் மாளவிகா மோகனனின் மாலத்தீவு Chilling வீடியோ..
நீச்சல் குளத்தில் ரிலாக்ஸாக நீச்சல் அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
மலையாள திரையுலகின் ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனுடைய மகள் மாளவிகா மோகனன். மலையாள சினிமாவில் அறிமுகமான மாளவிகா தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
இதனையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் மூலம் அவருக்கு ரசிகர் வட்டம் பெருக தொடங்கியது.
தொடர்ந்து, தற்போது அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறா படத்தில் நடித்துவருகிறார். இப்படம் டிஸ்ட் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தின் பொல்லாத உலகம் பாடல் வெளியாகி பல மில்லியன் பார்வைகளை குவித்துவருகிறது. மாறன் படத்தைத் தொடர்ந்து யுத்ரா எனும் பாலிவுட் படத்தில் நடித்துவருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.
View this post on Instagram
இந்நிலையில் தொடர் ஷூட்டிங்கில் இருந்து சிறு பிரேக் எடுத்திருக்கும் மாளவிகா, ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவு சென்றிருக்கிறார். அங்கு அவர் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு வைரலானார்.
View this post on Instagram
இந்த சூழலில் தற்போது நீச்சல் குளத்தில் ரிலாக்ஸாக நீச்சல் அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவை பலர் பகிர்ந்துவருகின்றனர்.