Watch video : தீபாவளி பண்டிகைக்கு தயாரான ராஷ்மிகா மந்தனா ! - எப்படின்னு நீங்களே கொஞ்சம் பாருங்க!
இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் வாரிசு , புஷ்பா 2 மற்றும் இரண்டு இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
”சாமி...சாமி” என்ற ஒன்றை பாடலால் இந்திய சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெங்கு , இந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர்தான் எங்களின் நேஷனல் கிரஸ் என ஒரு கூட்டம் வேற ஆர்மிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. ராஷ்மிகாவும் நடிகை சமந்தாவை போலவே உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வத்துடன் இருப்பவர் . அவர் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களை வொர்க் அவுட் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களால் நிரப்பி வருகிறார்.
நாளை தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில் , ராஷ்மிகா தனது பயிற்சியாளருடன் தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தீபாவளிக்கு தயாராகி வருகிறார் என்றால் நீங்கள் நினைப்பது போல புத்தாடை அணிந்தோ , இனிப்புகளை சாப்பிட்டோ இல்லை. மாறாக தனது பயிற்சியாளருடன் இணைந்து கால்கள் மற்றும் முக்கிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ராஷ்மிகாவின் பயிற்சியாளர் கரண் சாவ்னி தீபாவளிக்கு தயாராகிறோம் என்பது போல ஒரு கேப்ஷன் கொடுத்துள்ளார்.
View this post on Instagram
அந்த வீடியோவில் எடைகள், ரெசிஸ்டன்ஸ் பேண்ட்-ஆதரவு பக்க பலகைகள் மற்றும் சைக்கிள் க்ரஞ்ச்கள் , மெடிசன் பால் மூலம் சமநிலைப்படுத்துவது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்கிறார்கள் இருவரும். என்னப்பா இவ்வளவு தீவிரமாக ராஷ்மிகா உடற்பயிற்சியில் இறங்கிவிட்டார் என அவரது ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர். சிலர் பண்டிகை வந்தாலே உடற்பயிற்சிக்கு லீவ் கொடுத்துவிடுவார்கள் ஆனால் ராஷ்மிகா தீவிரமாகத்தான் இருக்கிறார். இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் வாரிசு , புஷ்பா 2 மற்றும் இரண்டு இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விக்ரம் நடிக்கும் சியான்- 61வது முதலில் ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்படிருந்தார் . ஆனால் சியான் - 61 படத்தின் படப்பிடிப்பு தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த தேதியில் தான் இந்தி படம் ஒன்றிற்கு கால் ஷீட் கொடுத்திருப்பதாக கூறி படத்திலிருந்து ராஷ்மிகா விலகிவிட்டார். இந்த நிலையில் ராஷ்மிகாவிற்கு பதிலாக மாளவிகா மோகம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.