Watch: மாலுக்கு விசிட் அடித்த ரன்பீர்.. செல்ஃபி எடுக்க முயன்று கீழே விழுந்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ!
ரன்பீர் கபூருடன் செல்ஃபி எடுக்க முயன்று ரசிகர்கள் கீழே விழுந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரன்பீர் கபூருடன் செல்ஃபி எடுக்க முயன்று ரசிகர்கள் கீழே விழுந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “பிரம்மாஸ்திரா”. 3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கிராஃபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் அப்போது கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் கடைசியாக செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு பிரோமோஷன் சார்ந்த பணிகள் நடந்து வந்தன. லால் சிங் சத்தா படம் போலவே, பிரம்மஸ்திரா படத்திற்கு எதிராகவும் சமூகவலைதளங்களில் ‘பாய்காட் பிரம்மஸ்திரா’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. ஆனால் எல்லாவற்றையும் மீறி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் படம் வெளியானது.
View this post on Instagram
படத்தின் முதல் காட்சி முடிந்து வெளியே வந்த மக்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்தனர். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் படத்தை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். ஒரு சாராருக்கு படம் பிடித்திருந்தாலும், தொடர்ந்து படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்த நிலையில் படம் தோல்வி அடைந்ததாக திரைவட்டாரத்தில் பேசப்பட்டன.
View this post on Instagram
ஆனாலும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக படக்குழு சார்பில் தொடர்ந்து படம் குறித்த வசூல் விபரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. அண்மையில் கூட படத்தின் இயக்குநரான அயன் முகர்ஜி 10 நாட்களில் படம் 360 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்திய சினிமா தினமான இன்று படத்தை பிரோமோட் செய்யும் விதமாக படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி, நடிகர் ரன்பீர் கபூர் ஆகியோர் இன்று மும்பை தானேவில் உள்ள விவியானா மாலுவில் உள்ள திரையரங்கிற்கு சென்றனர்.
தனது ரசிகர்களை பார்த்த ரன்பீர் கபூர் அவர்களுடன் கைகுலுக்கினார். அப்போது சில ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் சில ரசிகர்கள் கீழே விழுந்தனர். அவர்கள் மேலே எழுவதற்கு ரன்பீர் உதவினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து இருந்தனர். நான்கு மொழிகளிலும் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.