Watch Video : எங்க வீட்ல தோசை சூப்பரா இருக்கும்... சேதுபதியும், கத்ரீனாவும்.. கார் பயணத்துடன் ஒரு ஜாலி உரையாடல்
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை கத்ரீனா கஃப் காரில் சென்றுகொண்டே ஜாலியாக உரையாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது
மெரி கிறிஸ்துமஸ்
விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கஃப் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் (நாயகன் புகழ்) ஆகியோர் இந்தி பதிப்பில் நடித்துள்ளார்கள். இதேபோல் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் சிறப்பாக நடித்து தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் தங்கள் முத்திரை பதிக்கும் வண்ணம் நடித்து இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Presenting the #MerryChristmasTrailer - Tamil 🎁✨
— TipsMusicSouth (@tipsmusicsouth) December 20, 2023
In cinemas on 12th Jan 🎄#MerryChristmasTrailer Out Now: https://t.co/e4xqaw0VP5#SriramRaghavan @TipsFilmsInd #MatchboxPictures @RameshTaurani #SanjayRoutray #JayaTaurani #KewalGarg @VijaySethuOffl #KatrinaKaif
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் காம்போ
தமிழ் திரையுலகைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஜவான் , ஃபார்ஸி போன்ற படங்களின் மூலம் இந்தி சினிமாவில் தொடர்ச்சியான பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்திருக்கின்றன. தற்போது பாலிவுட் சினிமாவின் உட்ச நட்சத்திரமான கத்ரீனா கைஃப் அவர்களுடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இந்த ட்ரெய்லரில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி , உரையாடல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளன. இப்படியான நிலையில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் காரின் இணைந்து செல்லும் ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
Vijay Sethupathi - Katrina Kaif💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 23, 2023
pic.twitter.com/lhSAyxT3aC
இந்த வீடியோவில் கத்ரீனா கைஃப் விஜய் சேதுபதி தன் வீட்டிற்கு வந்தால் சூப்பராக தோசை செய்து தருவதாக கூறுகிறார். இந்த வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மகாராஜா
குரங்கு பொம்மை படத்தை இயக்கி பெரிதும் பாராட்டிக்களைப் பெற்ற நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கியிருக்கும் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மகாராஜா விஜய் சேதுபதி நடிக்கும் 50 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். மேலும் மம்தா மோகன் தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி, நட்டி என பலரும் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு வெளியாகிய மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.