watch video: சின்ன சின்ன அன்பில்தானே..! தெருவோர சிறுமிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகர்...!
அனுபம் கெரினின் இந்த இனிமையான செயலை அவரது ரசிகர்கள் மிகவும் பாராட்டினார்கள்.
பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர், தனது பிறந்தநாளை தெருவோரத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை அனுபம் கெர் 67 வயதை எட்டினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். சமீபத்தில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தின் வெற்றியில் மூழ்கியிருக்கும் அனுபம் கெர், தனது பிறந்தநாளை தனது சிறப்பு நண்பர்களான தர்ஷனா, திவ்யா மற்றும் யோகேஷ் ஆகியோருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “என் தாமதமான பிறந்தநாளை எனது தெரு நண்பர்களான தர்ஷனா, திவ்யா மற்றும் யோகேஷ் ஆகியோருடன் கொண்டாடி அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியதில் மகிழ்ச்சி. நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். மற்ற குழந்தைகளான கோஹினூர் மற்றும் பாரதியை மிஸ் செய்துவிட்டேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
Happy I could celebrate my belated birthday with my morning walk friends #Darshana #Divya and #Yogesh and cut the cake with them. I feel really blessed. Missed the other kids especially #Kohinoor and #Bharati. ❤️ #Love #Friends #StreetsOfMumbai pic.twitter.com/7o6dnExzRY
— Anupam Kher (@AnupamPKher) March 11, 2022
அனுபம் கெரினின் இந்த இனிமையான செயலை அவரது ரசிகர்கள் மிகவும் பாராட்டினார்கள். ரசிகர்களில் ஒருவர், ‘யூ ஆர் சோ ஸ்வீட் ஸார்’ என்று எழுதினார். மற்றொருவர், ‘வாழ்க்கைக்கான தருணங்கள்’ என்றார்.
मेरे जन्मदिवस पर इतने प्यार से शुभकामनाएँ और आशीर्वाद भेजने के लिए आप सबका बहुत बहुत धन्यवाद एवं आभार! जय हो! Thank you all for wishing me on my birthday with so much of love, affection and warmth! You people really made my day memorable! Jai Ho! 🙏🌺❤️ pic.twitter.com/NGd9OhVVGp
— Anupam Kher (@AnupamPKher) March 8, 2022
சமீபத்தில், அனுபம் கெர் நடித்த 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வந்ததிலிருந்து பேசப்பொருளாக மாறியுள்ளது. மேலும், நடிகர் சூரஜ் பர்ஜாத்யாவின் ஊஞ்சாய் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்