மேலும் அறிய

கரூரில் எந்த திரையரங்குகளிலும் படங்கள் திரையிடப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்...!

புதிய படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் ஓடிடி தளங்களில் வெற்றி பெற்ற படங்களை திரையிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கரூர் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 9 திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கொரோனா  தொற்று இரண்டாவது அலை காரணமாக தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை குறைத்து கட்டுப்பாடுகளை அதிகரிக்கத் தொடங்கியதால் ஆலயங்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

தற்போது தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வருவதால் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறந்து 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் திரையரங்க உரிமையாளர்கள் கடந்த வாரத்தில் கோரிக்கை ஒன்றை வைத்தனர். திரையரங்குகளை நம்பி பல்வேறு குடும்பத்தினர் உள்ள நிலையில் அவர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


கரூரில் எந்த திரையரங்குகளிலும் படங்கள் திரையிடப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்...!

இதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்தில் வருகின்ற இன்று தேதி முதல் 50 சதவீத இருக்கை வசதியுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து, திரையரங்கு உரிமையாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.


கரூரில் எந்த திரையரங்குகளிலும் படங்கள் திரையிடப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்...!

அதைத் தொடர்ந்து, இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கிலும் காலை 11 மணி காட்சிகள் திரையிட ஏற்பாடுகள் செய்யப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் திரையரங்குகள் காட்சிகள் ஏதும் இன்று திரையிடப்படவில்லை. அதுவும் குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் உள்ள 9 திரையரங்குகளிலும் இன்று புதிய படங்கள் ஏதும் வெளியாகாத காரணத்தால் திரைப்படங்களை ஏதும் திரையிடவில்லை என கரூர் அமுதா திரையரங்க மேலாளர் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.


கரூரில் எந்த திரையரங்குகளிலும் படங்கள் திரையிடப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்...!

மேலும், இதை தொடர்ந்து அவர் பேசுகையில் கரூர் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக திரையரங்குகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழக அரசு புதிய உத்தரவால் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு அறிவித்துள்ள திரையரங்க ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவிற்கு இணங்க எங்கள் திரையரங்கு பிரிவின் கீழ் பணியாற்றும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொண்டே பணிக்கு வரவேண்டுமென உத்தரவு வழங்கியுள்ளோம். அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள 9 திரையரங்கில் இதே நடைமுறையை பின்பற்றி வருகிறோம். கரூர் மாவட்டத்தில் 9 திரையரங்களில் உள்ள பணியாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் இத்துறை சார்ந்து பயணித்து வருகின்றனர்.


கரூரில் எந்த திரையரங்குகளிலும் படங்கள் திரையிடப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்...!

அதேபோல், கரூர் மாவட்டத்தில் இன்று திரையரங்கள் திறக்கப்பட்ட நிலையில் வரும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் வரும் பட்சத்தில் அதனை திரையிட தயார் நிலையில் இருப்பதாகவும், அதேபோல் ஒடிடி உள்ளிட்ட இணையதளங்களில் வெற்றியடைந்த திரைப் படத்தை வெளியிடவும் தயாராக இருப்பதாகவும் நம்மிடம் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் 9 திரையரங்குகளில் நேரடியாக சுமார் 300 நபர்களும், மறைமுகமாக சுமார் 500 நபர்களும், திரையரங்கத்தில் நம்பி பயணிப்பதால் தமிழக அரசு திரையரங்க திறக்க அனுமதி வழங்கியுள்ளது. அனைத்து குடும்பத்தினரும் மனமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget