ஃபேவரெட் ரெஸ்டாரெண்ட்டில் கரீனா கபூர்: இன்ஸ்டாவில் கலக்கல் போஸ்ட்
லண்டனில் உள்ள தனக்கு ஃபேவரெட் ரெஸ்டாரெண்ட்டில் கரீனா கபூர் காபி குடிக்கும் போட்டோ இணையத்தில் வைரல். ’இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு’ என்ற கேப்சனுடன் இன்ஸ்டாவில் பதிவிட்ட கரீனா.
லண்டனில் உள்ள தனக்கு ஃபேவரெட் ரெஸ்டாரெண்ட்டில் கரீனா கபூர் காபி குடிக்கும் போட்டோ இணையத்தில் வைரல். ’இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு’ என்ற கேப்சனுடன் இன்ஸ்டாவில் பதிவிட்ட கரீனா.
View this post on Instagram
”தி டிவேசன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்” எனும் தனது படத்தினை முடித்துவிட்டு லண்டனில் உள்ள தனக்கு மிகவும் பிடித்த ரெஸ்டாரெண்டுக்கு போயுள்ளார் பாலிவுட் நடிகை கரீனா கபூர். ’இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு மிகவும் பிடித்த ரெஸ்டாரெண்டடில்’ என்ற கேப்சனுடன் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள படத்தில் மிகவும் அழகாக இருக்கும் அவர், வெள்ளை நிற டி-சர்ட் அணிந்தும், ஐஸ்புளூ நிற ஜீன்ஸும், கருப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்துள்ளார். காபியை குடிப்பது போன்ற போட்டோவில் மாஸாக இருக்கும் கரீனாவை நெட்டிசன்களும் அவரது ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
ஜெய்தீப் அகல்வாத்
கரீனாவின் இந்த போஸ்ட்க்கு தி டிவேசன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ் படத்தில் உடன் பணியாற்றிய ஜெய்தீப் அகல்வாத், ”ஏய்ய்ய்.. ஏய்ய்ய்.. மிகவும் கடினமான உழைப்புக்குப் பிறகு வெக்கேஷன்...என்ஜாய்” என கபெண்ட் செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்