‛அறிஞர் அண்ணாவுக்கு பெருமை சேர்க்கும் வெந்து தணிந்தது காடு’ -சொல்கிறார் கூல் சுரேஷ்!
‛இனிமேல் வெந்து தணிந்தது காடு... பார்ட் 2க்கு வணக்கத்தை போடு...னு சொல்வேன்’ - கூல் சுரேஷ்.
சிம்பு நடித்த, கவுதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் சற்று முன் வெளியாகி முதல் காட்சி நிறைவடைந்துள்ளது. சென்னை கமலா தியேட்டரில் முதல் காட்சிக்கு வந்த கூல் சுரேஷ், முதல் பாதி திரைப்படம் பார்த்த பின் பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதோ அந்த பேட்டி.
‛‛இன்று வெந்துதணிந்தது காடு ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்த நாள் மிக முக்கியமான நாள். அதுமட்டுமல்ல, உண்மையில் இன்று முக்கியமான நாள். அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாள் இன்று. அறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று, பெருமை சேர்க்கும் விதமாக வெந்து தணிந்தது காடு ரிலீஸ் ஆகியிருப்பதால், தமிழக மக்கள் ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று.
View this post on Instagram
நான் கூட சிம்புக்காக எக்ஸ்ட்ரா சாங்ஸ், சண்டை வெச்சிருப்பாங்கனு நெனச்சேன். இது படம் அல்ல, பாடம். ரொம்ப சிறப்பா இருக்கிறது முதல் பாகம். பிஜிஎம் வரும் போது, ரசிகர்கள் அலற விடுறாங்க. அந்த ஹீரோயின் கன்னத்தில் குழி விழுவது அவ்வளவு அழகா இருக்கு. சிம்பு துப்பாக்கி எடுத்து நிற்கிற சீன் அப்படியே கண்ணில் நிற்கிறது. இதுவரை பார்த்த சிம்பு வேற, இப்போ பார்க்குற சிம்பு வேற மாதிரி இருக்கும்,’’
என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். அதன் பின், படம் முடிந்த பின், முழு படம் தொடர்பான தனது கருத்தை கூல் சுரேஷ் தெரிவித்தார். இதோ அந்த பேட்டி...
‛‛எந்த படத்தில் இருந்தும் எந்த சீனும் சுடப்பட்டாமல் படம் எடுத்திருக்கிறார்கள். எஸ்.டி.ஆர்.... என்று பார்க்க முடியாது. எஸ்.டி.ஆர்., என்று அமைதியாக தான் இந்த படத்தை பார்க்க முடியும். வெந்து தணிந்தது காடு பார்ட் 2க்கு வணக்கத்தை போடு. எந்த படத்திலும் இல்லாத சிம்புவை நீங்க பார்க்கலாம். நடுவல கொஞ்சம் லவ் சீன்ஸ் வருகிறது. ஆடியன்ஸ் அப்படியே மெய் மறந்து போயிடுறாங்க. வெந்து தணிந்தது காடு எஸ்டிஆர்.,க்கு வணக்கத்தை போடு , வெந்து தணிந்தது காடு கவுதம் சாருக்கு வணக்கத்தை போடு. இரண்டாம் பாகத்திற்கு எல்லாருக்கும் வெயிட்டிங்’’
என்று கூறினார்.