Cool Suresh: கூல் சுரேஷிற்கு ஐபோன் கிஃப்ட்... பூஜை அறைக்கு வந்த ஐசரி கணேஷ் போட்டோ!
‛வெந்து தணிந்தது காடு ஐசரி கணேஷ் சாருக்கு வணக்கத்த போடு...’ கூலான பரிசு வாங்கிய கூல் சுரேஷ்.
![Cool Suresh: கூல் சுரேஷிற்கு ஐபோன் கிஃப்ட்... பூஜை அறைக்கு வந்த ஐசரி கணேஷ் போட்டோ! VTK Producer vels film international ishari k ganesh gifts iphone to cool suresh Cool Suresh: கூல் சுரேஷிற்கு ஐபோன் கிஃப்ட்... பூஜை அறைக்கு வந்த ஐசரி கணேஷ் போட்டோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/27/0e1ab72dcd595df47bd635dd818292ff1664266162972102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெந்து தணிந்தது காடு எஸ்.டி.ஆருக்கு வணக்கத்த போடு என்று லூப் மோடில் இந்த வசனத்தை சொல்லி, ட்ரெண்ட் ஆனவர் கூல் சுரேஷ். இவர் செய்த ப்ரொமோஷனுக்காகவே, இப்படத்தை காண பல பேர் காத்திருந்தனர். அதுபோல், வெந்து தணிந்தது காடு படம், மக்கள் இடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றது, அதையடுத்து பொருளாதார ரீதியாகவும் படம் நல்ல வசூல் செய்த்துள்ளது. இதனையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வெந்து தணிந்தது காடு படத்திற்கு ப்ரொமோஷன் செய்த கூல் சுரேஷிற்கு விலைமதிப்பு பெற்ற ஐபோனை பரிசளித்துள்ளார்.
அதற்கு பதிலாக, கூல் சுரேஷ் அவருக்கு இரண்டு குச்சிமிட்டாயை பரிசாக கொடுத்துள்ளார். அந்த குச்சிமிட்டாயில், வெந்து தணிந்தது காடு வேல்ஸ் காலேஜுக்கு வணக்கத்த போடு என்றும் மற்றோரு மிட்டாயில் வெந்து தணிந்தது காடு ஐசரி கணேஷ் சாருக்கு வணக்கத்த போடு என எழுதியுள்ளார்.
View this post on Instagram
இதைப்பார்க்க, கூல் சுரேஷுக்கு ஐபோன், ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாயா என்பது போல் உள்ளது. பார்க்க காமெடியாக இருந்தாலும், மிட்டாய் கொடுத்த செயல் கொஞ்சம் க்யூட்டாகதான் உள்ளது. இது என்னடா பிரமாதம் , இன்னொரு விஷயம் இருக்கு பாரு எனும் வகையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்துள்ளார். அவரின் பூஜை அறையின் போட்டோ மற்றும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்
கூல் சுரேஷ்.
வெந்து தணிந்தது காடு ஐசரி கணேஷ் சாருக்கு வணக்கத்தை போடு
— TrendSocial (@TrendSocialNews) September 27, 2022
என்று ஒரு வித்தியாசமாக பரிசை கொடுத்து அசத்திய கூல் சுரேஷ்#coolsuresh #VenthuThanindhathuKaadu pic.twitter.com/ZUqKC2op9u
View this post on Instagram
இதற்கு முன்பு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் கெளதம் மேனனுக்கு, புல்லட் பைக் ஒன்றை பரிசாக கொடுத்தார். அதுபோல், நடிகர் சிம்புவிற்கு விலை மதிப்புள்ள ஒரு காரை அன்பு பரிசாக கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)