![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vishal 33 movie Pooja: பட பூஜைக்கு வித்தியாசமான உடையில் வந்த விஷால்.. கிண்டலடித்த நெட்டிசன்ஸ்..!
நடிகர் விஷால் 33 ஆவது படமாக உருவாக இருக்கிறது மார்க் ஆண்டனி.
![Vishal 33 movie Pooja: பட பூஜைக்கு வித்தியாசமான உடையில் வந்த விஷால்.. கிண்டலடித்த நெட்டிசன்ஸ்..! Vishal SJ Suryah Mark Antony begins shoot Ritu Varma plays the female lead Vishal 33 movie Pooja: பட பூஜைக்கு வித்தியாசமான உடையில் வந்த விஷால்.. கிண்டலடித்த நெட்டிசன்ஸ்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/06/e76b8d8996168a7f3342012bb8d04730_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
படபூஜைக்கு வித்தியாசமான உடையில் வந்த விஷாலை நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.
நடிகர் விஷாலின் 33 ஆவது படமாக உருவாக இருக்கும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. த்ரிஷா இல்லன்னா நயன் தாரா, AAA, பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் முதன்முறையாக ரிது வர்மா விஷாலுக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
View this post on Instagram
இவர்களுடன் தெலுங்கு நடிகரான சுனில் வர்மா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்தப்பூஜையில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இதில் எஸ்.ஜே.சூர்யா டீசன்ட்டாக வர விஷால் வித்தியாசமான உடையில் வந்திருந்தார். பேண்டா, வேட்டியா என்று தெரியாத அளவுக்கு ஒரு மாதிரியான உடையில் வந்திருந்தார் விஷால்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர்.அவரது உடை குறித்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டனர். அதேவேளையில் உடை என்பது தனிப்பட்ட விருப்பம் எனவும், இதில் கிண்டலுக்கு என்ன இருக்கிறது எனவும் விஷாலுக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்,
முன்னதாக நடிகர் விஷாலின் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் படம் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)