Viruman Release LIVE: “தாரை தப்பட்டை கிழியப்போகுது” - வெறித்தனமாக களமிறங்கிய விருமன்.. லைவ் அப்டேட்ஸ்!
Viruman Release LIVE Updates: ஆகஸ்ட் 12 ஆம் தேதி விருமன் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது

Background
Viruman Release LIVE Updates: தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன்(Viruman). இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை தியேட்டர்களில் வெளியாகிறது.
இதன் காரணமாக கார்த்தி, அதிதி ஊடகங்களில் விரும6ன் படத்தின் புரொமோஷன்களில் கலந்து கொண்டுள்ளனர். அதில் நேர்காணல் ஒன்றிற்கு அளித்துள்ள கார்த்தி அளித்துள்ள பேட்டியில் விருமன் படத்தில் ஏன் நடித்தேன் என தெரிவித்துள்ளார். அதில் நான் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் கிராமங்களை மையமாக வைத்து அதிக படம் எடுக்க சொல்கிறார்கள். கடைக்குட்டி சிங்கம் ரிலீசான போது கிராமப்பகுதிகளில் உள்ள தியேட்டர்களை மூட முடிவு செய்த உரிமையாளர்களின் எண்ணத்தை அது மாற்றியது. மேலும் சமீபத்தில் வந்த படங்களில் கிராமம் சார்ந்த படங்கள் மிகக் குறைவு அதனால் அதனை தேர்வு செய்தேன் என கார்த்தி தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
முன்னதாக, 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த திரைப்படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காலாவதியான கதைக்களம்? விருமன் விமர்சனம்!
சுல்தானை வீழ்த்திய விருமன்
கார்த்தி நடித்த சுல்தான் படம் முதல் நாளில் 5.12 கோடியை வசூல் செய்தது. சுல்தான் படத்தை விட 3 கோடி அதிகமாக வசூலித்து தமிழகம் முழுவதும் மொத்தம் 8.2 கோடியை விருமன் படம் வசூல் செய்துள்ளது.





















