Viruman Promotion: திடீரென மலேசியாவுக்கு சென்ற கார்த்தி- அதிதி ஷங்கர்... இதுதான் காரணமா?
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன்.
நடிகர் கார்த்தி, நடிகை அதிதி ஷங்கர் ஆகியோர் மலேசியா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.
Team #Viruman in Malaysia.
— Haricharan Pudipeddi (@pudiharicharan) August 7, 2022
Nice to see @Karthi_Offl going all out to extensively promote the film 👌👌 pic.twitter.com/NN97X5lDyS
#Viruman Offline Promotions 🔥🔥#VirumanFromAug12@2D_ENTPVTLTD @SakthiFilmFctry pic.twitter.com/Oxdc0qjzGB
— Manibharathi Selvaraj (@smbmanibharathi) August 7, 2022
இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, கார்த்திக்கு முன்பே நடிக்க வந்தாலும் சினிமாவுக்காக என்னைவிட அதிகம் சிந்திப்பது கார்த்தி தான் என தெரிவித்தார். மேலும் எங்கள் இருவருக்கும் அடையாளம் கொடுத்தது பாலாவும், அமீரும் தான் எனவும் சூர்யா கூறினார்.
View this post on Instagram
படத்தின் ட்ரெய்லரும் அனைவரையும் பெரிதும் கவர்ந்துள்ளது. விருமன் படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக கார்த்தி, அதிதி ஷங்கர் இருவரும் மலேசியா சென்றுள்ளனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்