Kohli Anushka Pic: ”எனது பலம்..” : அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி.. இதயங்களைத் திருடும் போஸ்ட்
விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக இருந்தவர் விராட் கோலி. ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் நடிகையும், தனது நீண்ட கால தோழியுமான அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தாள். மகளுக்கு வாமிகா என பெயரிட்டுள்ளனர்.
இச்சூழலில் இருவரும் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது கமெண்ட்ஸையும், அன்பையும் வாரி வழங்குவர்.
View this post on Instagram
இந்நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் வெள்ளை நிற உடையில் இருக்கும் அந்தப் புகைப்படத்தில் “எனது பலம்” (My Rock) விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் அப்புகைப்படத்திற்கு பலர் தங்களது அன்பை கமெண்ட்ஸ் வடிவில் தெரிவித்துவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Watch Video: பீல்டிங் செய்தபோது தலையில் தாக்கிய பந்து.. ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட மேற்கிந்திய வீரர்! - அறிமுக போட்டியில் பரிதாபம்