Vikram Movie Record: நூற்றாண்டு தமிழ் சினிமாவில் விக்ரம் செய்த வேற லெவல் சாதனை! 100 நாட்களைக் கடந்தும் ரெக்கார்ட்!
தமிழ் சினிமாவில் இதுவரையில் எந்த ஒரு திரைப்படமும் செய்யாத ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு பெருமையுடன் நகர்த்தி சென்றுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இது வரையில் கடந்த 100 ஆண்டுகளில் தமிழ் சினிமா காணாத ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்து சாதனை படைத்துள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் நடிப்பில் வெளியான "விக்ரம்" திரைப்படம். 100 நாட்களை கடந்தும் இப்படம் இன்றும் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளை கொடுத்து வசூலை வரலாறு காணாத அளவிற்கு ஈட்டி ரெகார்ட் செய்துள்ளது என்றால் அது மிகையல்ல. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியான இந்த ஃபான் இந்தியா திரைப்படம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. Footfalls எனக்கூறப்படும் அதிக பார்வையாளர்கள் பார்த்த திரைப்படம் என்ற சாதனையை விக்ரம் படைத்துள்ளது. இது 100 ஆண்டுகளில் தமிழ் சினிமா காணாத ஒரு மிகப்பெரிய சாதனையாகும்
விக்ரம் ரிலீசுக்கு முன்:
விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே ஏகபோக வரவேற்பை பெற்றது. படத்தின் ட்ரைலர் வெளியான நாள் முதலே ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக அமைந்தது. நாடு முழுவதும் இப்படத்திற்கான விளம்பர பணிகள் நடைபெற்றது. இதுவரையில் எந்த ஒரு தமிழ் நடிகருக்கும் இது போல விளம்பரம் செய்ததில்லை என்ற பேட்டர்னை தவிடு பொடியாக்கினார் கமல்ஹாசன்.
"விக்ரம்" கூட்டணிக்கு கிடைத்த வெற்றி :
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒவ்வொருவரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை வெகு சிறப்பாக செய்து இருந்தார்கள். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரையில் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நகர்த்தியது பாராட்டை பெற்றது. படத்திற்கு பக்க பலமாய் அமைந்தது இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை. ஏஜென்ட் டினா முதல் நடிகை காயத்ரி வரை அனைவரின் நடிப்பும் மிக மிக சிறப்பு.
வேற லெவல் சாதனை படைத்த விக்ரம் :
தமிழகத்தில் படம் வெளியான முதல் நாளில் கூட்டம் வழிந்ததை அடுத்து தமிழக அரசே இப்படத்தினை 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளோடு திரையரங்குகளில் காட்சிப்படுத்த அனுமதித்தனர். படம் வெளியான முதல் நாளே தமிழகத்தில் சுமார் மட்டும் 32 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் "விக்ரம்" வசமாகின. எந்த பக்கம் திரும்பினாலும் விக்ரம் படத்தின் வெற்றி குறித்த அப்டேட்களாக நிரம்பி வழிந்தன. விக்ரம் திரைப்படம் சுமார் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓடிடியிலும் டாப் டக்கர்:
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விக்ரம் படம் வெளியாகி அங்கும் சாதனை படைத்துள்ளது. அதிகமானோர் பார்வையிட்ட திரைப்படம், அதிகமான சந்தாதாரர்கள் மற்றும் அதிக நேரம் பார்க்கப்பட்ட என மூன்று பிரிவுகளில் இப்படம் ஓடிடியிலும் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
𝟭𝟬𝟬 𝗥𝗘𝗠𝗔𝗥𝗞𝗔𝗕𝗟𝗘 𝗗𝗔𝗬𝗦 𝗢𝗙 #𝗩𝗜𝗞𝗥𝗔𝗠 𝗔𝗧 𝗧𝗛𝗘 𝗕𝗢𝗫 𝗢𝗙𝗙𝗜𝗖𝗘 🥁💥#100DaysofVikram#VikramRoaringSuccess @ikamalhaasan @Udhaystalin @Dir_Lokesh @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM pic.twitter.com/HPcDpx0aY2
— Red Giant Movies (@RedGiantMovies_) September 9, 2022
100 நாள் கொண்டாட்டம்:
நீண்ட நாட்களுக்குப் பின் எந்த வித சுய பரிசோதனையும் இல்லாமல், மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் கமல் நடிப்பில் வெளியான கமர்ஷியல் படம் என்பதால் மக்களும் ஆர்வமாகவும் கூட்டம் கூட்டமாகவும் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு கார், உதவி இயக்குனர்களுக்கு பைக், கௌரவ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யாவிற்கு ரோலேக்ஸ் வாட்ச் என பரிசுகள் மூலம் அன்பை தெரிவித்தார். படத்தின் 100 நாள் கொண்டாட்டமாக போஸ்டர்கள், டீஸர் என களைகட்டியது.
#KamalHaasan 's Mammoth INDUSTRY HIT #Vikram ends its theatrical run in TN today at Coimbatore KG Cinemas (113 days).
— Ramesh Bala (@rameshlaus) September 22, 2022
The movie has set the ALL TIME record for:
Highest Gross
Highest Share &
Highest Footfalls in 100 years of Tamil Cinema. (TN) #KamalHaasan#LokeshKanagaraj
விக்ரம் ரிலீசுக்கு பின்:
தமிழகம் எங்கும் அளவில்லா வரவேற்பை பெற்ற "விக்ரம்" திரைப்படம் கோவை மாவட்டத்தில் உள்ள KG சினிமாஸ் திரையரங்கில் இதுவரையில் 113 நாட்களுக்கு வெற்றிகரமாக ஓடிய பிறகு இன்றுடன் நிறைவு செய்யப்படுகிறது. தமிழ் சினிமாவில் இதுவரையில் எந்த ஒரு திரைப்படமும் செய்யாத ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு பெருமையுடன் நகர்த்தி சென்றுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த அறிவிப்பை ட்விட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டது.