11 year of Thaandavam: விக்ரமின் மற்றுமொரு மாறுபட்ட முயற்சி.. எக்கோலொகேஷன் டெக்னிக்.. தாண்டவம் வெளியான நாள்!
குண்டு வெடிப்பு சம்பவத்தில் அனுஷ்காவை இழக்கும் விக்ரமிற்கு கண் பார்வையும் போகிறது. கண்பார்வை இல்லாமல், மனைவியை இழந்து துடிக்கும் விக்ரம் எதிரிகளை பழிவாங்க புறப்படுகிறார்.
11 year of Thaandavam: 2012ஆம் ஆண்டு விக்ரம், அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த தாண்டவம் படம் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளை கொண்ட தாண்டவம் படத்தை ஏ.எல். விஜய் இயக்க, யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. படத்தில் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், லட்சுமி ராய், சந்தானம், நாசர், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.
இந்தியாவின் உளவுப்பிரிவான ராவில் பணியாற்றும் விக்ரமும் ஜெகபதி பாபுவும் நண்பர்களாக இருப்பார்கள். திடீரென தனது சொந்த ஊருக்கு செல்லும் விக்ரமுக்கு திருமணம் நிச்சயமாகும். விருப்பம் இல்லாமல் திருமணம் செய்யும் விக்ரமுக்கு அனுஷ்காவை பார்த்ததும் பிடித்து போய் விடுகிறது. அனுஷ்காவை திருமணம் செய்து கொண் வேடுலைக்காக லண்டனுக்கு செல்கிறார் விக்ரம்.
அங்கு நடக்கும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அனுஷ்காவை இழக்கும் விக்ரமிற்கு கண் பார்வையும் போகிறது. கண்பார்வை இல்லாமல் மனைவியை இழந்து துடிக்கும் விக்ரம், எதிரிகளை பழிவாங்க புறப்படுகிறார். அவருக்கு உதவியாக எமி ஜாக்சன் இணைகிறார். ரா அதிகாரியாக இருப்பதால் கண் பார்வை இல்லை என்றாலும் விக்ரமின் ஒவ்வொரு வியூகமும் எதிரிகளை நோக்கி நகர்வதாக படத்தை இயக்கி இருப்பார் ஏ.எல்.விஜய். படத்திற்கு நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, எக்கோலொகேஷன் டெக்னாலஜியைப் பயன்படுத்திய விதம், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளின் காட்சிகள், விக்ரம் - அனுஷ்காவின் காதல் பார்வைகள், என படத்தில் ஏராளமான விஷயங்கள் ரசிக்க வைத்தன.
How to say “I love you” without actually saying it ❤️
— _desivibez_ (@_desivibez_) June 15, 2023
•#Thaandavam #ChiyaanVikram #AnushkaShetty #Kollywood #TamilCinema pic.twitter.com/ttRHKEEciN
நா. முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இசையில் இனிமை சேர்த்திருப்பார் ஜி.வி. பிரகாஷ். வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து தனக்கென தனி முத்திரையை படைத்து வரும் விக்ரம், கண் பார்வையில்லாத ரா அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார். ஏ.எல்.விஜய் - விக்ரம் காம்போவில் வித்தியாசம் காட்டி ரசிக்க வைத்த தாண்டவம் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தின் பாடல்கள் 10 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து ரசிக்கப்பட்டு இன்றைய ரீல்ஸ் உலகிலும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.