Vijayakanth Birthday: கேப்டனுக்கு 70தாவது பிறந்தநாள்.. ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்!
விஜயகாந்த் இன்று தனது 70தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி நல்ல பெயரை மட்டுமே சம்பாதித்தவர்கள் தனித்தனியே இருக்கிறார்கள். ஆனால், இரண்டிலும் நல்ல பெயரைமட்டும் சம்பாதித்தவர் என்றால் அது விஜயகாந்த் தான். 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை திரைப்படம் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். ஆனால் 1980 ஆம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழக்கம் படம் தான் அவரை அனைவரிடத்திலும் பரீட்சையமாக்கியது.
சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் விஜயகாந்த், சினிமா என்னும் கலையை வசூலுக்காக மட்டும் என்றல்லாமல் எல்லா தரப்பு மக்களும் பயனடையவேண்டும் என்று நினைத்தவர் . தனக்கு போட்டியாக கருதப்பட்ட சக நடிகர்களையும் அனுசரித்து அரவணைத்து சென்றதால் இன்றும் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக விஜயகாந்த் உள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்த் இன்று தனது 70தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாள் வாழ்த்துகளால் ட்விட்டர் பக்கம் நிரம்பி வழிகிறது.
என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான @iVijayakant அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) August 25, 2022
உடல் நலம் பெற்று - துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
"வானத்தைப் போல" பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், "மரியாதை"யையும் பெற்று "புலன் விசாரணை" செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் "சகாப்தமாக" "கேப்டனாக" "மரியாதை"யுடன் "நெறஞ்ச மனசு"டன் வலம் வந்து கொண்டிருக்கும்(1/2)@iVijayakant#HBDVijayakant
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 25, 2022
(File Photo) pic.twitter.com/qPzcQYqWDX
இன்று பிறந்தநாள் காணும் ஆருயிர் நண்பரும், உடன்பிறவா சகோதரரும், தேமுதிக தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் பூரண ஆரோக்கியத்துடன் வாழ்வில் அனைத்து வளமும், நலமும் பெற்று, மென்மேலும் பல வெற்றிகள் கண்டு மகிழ்வுடன் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். @iVijayakant pic.twitter.com/LhJhUaALcO
— R Sarath Kumar (@realsarathkumar) August 25, 2022
70வது பிறந்தநாள் காணும் தே.மு.தி.க நிறுவன தலைவர், நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணியாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @iVijayakant
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 25, 2022
தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 25, 2022
அவர் முழு உடல் நலத்தோடு மக்கள் சேவையை இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன். pic.twitter.com/pzVaoRv22k