Happy Birthday Vijay : விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்...அதுவும் டபுள் ட்ரீட்...
கம்பீர லுக்கில் கோட் சூட்டுடன் நடிகர் விஜய் இருக்க ”The Boss Returns" என்ற கேப்ஷனுடன் “வாரிசு” என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் அடுத்த அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். இதனையடுத்து விஜய்யின் 66வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபலி இயக்கத்தில் தமன் இசையமைப்பில் இப்படம் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், மற்ற கேரக்டர்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு, ஷ்யாம், சம்யுக்தா, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
The BOSS Returns as #Varisu#VarisuFirstLook#HBDDearThalapathyVijay
— Sri Venkateswara Creations (@SVC_official) June 21, 2022
Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp#Thalapathy66 pic.twitter.com/x2HXJH3ejq
இதனிடையே கடந்த ஜூன் 19 ஆம் தேதி தளபதி 66 படத்தின் first look போஸ்டர் ஜூன் 21 ஆம் தேதி மாலை 6.01க்கு ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவலை, தளபதி 66 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் #thalapathy66FLDay என்ற ஹேஷ்டேக்கினை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே படத்தின் first look போஸ்டர் நேற்று வெளியானது. அதில் கம்பீர லுக்கில் கோட் சூட்டுடன் நடிகர் விஜய் இருக்க ”The Boss Returns" என்ற கேப்ஷனுடன் “வாரிசு” என படத்திற்கு பெயரிடப்பட்டிருந்தது. இது கலவையான கருத்தைப் பெற்றிருந்தாலும் விஜய்யின் அடுத்தப்பட அப்டேட்டோடு அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.
Second look ah?
— Sri Venkateswara Creations (@SVC_official) June 21, 2022
Senjitta Pochu 😉#VarisuSecondLook is releasing Tomorrow at 11:44#VarisuThirdLook is releasing Tomorrow at 17:02#HBDDearThalapathyVijay#Varisu #Vaarasudu
இதுதொடர்பாக ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் செகண்ட் லுக் இன்று காலை 11.44 மணிக்கும், 3rd லுக் போஸ்டர் மாலை 5.02 மணிக்கும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்