மேலும் அறிய

Siragadikka Aasai: வளையலால் மீண்டும் சிக்கும் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய அப்டேட் இதோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை காணலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் மிக குறுகிய காலத்தில் விஜய் தொலைக்காட்சியின் நம்பர் 1 சீரியலாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் சீரியலில் இயக்குனர் பரபரப்புகளுக்கும் சஸ்பென்ஸ்களுக்கும் குறைவில்லாமல் கதையை நகர்த்தி செல்வது தான். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

இன்றைய எபிசோடில் ( அக்டோபர் 27) விஜயா, ரோகினியை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷம்மா.. உன்னால தான் நான் தலை நிமிர்ந்து நிக்குறேன் என்கிறார். உடனே முத்து ஏன் இதுக்கு முன்னாடி கழுத்து சுளுக்கி இருந்துச்சா? நிமிர முடியலயா? என கலாய்க்கிறார். அதற்கு முத்துவின் அம்மா,”டேய் வயித்தரிச்சல்ல பேசாதடா.. என் மருமக எனக்காக எவ்ளோ பெரிய விஷயம் பண்ணியிருக்கா பார்த்திங்களா? இதான்டா பெரிய எடத்து பொண்ணுங்குறது” என கூறுகிறார். 

உடனே முத்து ஓவரா பேசாதீங்க முதல்ல பணம் சரியா இருக்கானு எண்ணி பார்க்கனும் என கூறி அவர் தம்பியை பணத்தை எண்ணலாம் வாடா என அழைக்கிறார். ஆனால் அவர் தம்பியோ அதெல்லாம் எதுக்குண்ணா என்று கூற, முத்து பணத்தை எண்ண பணத்தில் கை வைக்கிறார். முத்துவின் அப்பா பணத்தை வைடா என கண்டிக்கிறார். பின் முத்துவின் அப்பா ரோகினியிடம் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் உன் அத்தை தானா ஒரு முடிவு எடுத்து செய்ததுனால தான்  இவ்வளவு பெரிய பிரச்சனை வந்தது என்று பக்குவமாக எடுத்து கூறுகிறார். 

உடனே விஜயா,  நீங்கள் பார்த்து கொண்டு வந்த மருமகளால தான் இந்த வீட்டில் எல்லா பிரச்சனையும் வருகிறது என்று மீனாவை வம்புக்கு இழுக்கிறார். உன்னால தாண்டி இந்த வீட்ல எல்லா பிரச்சனையும் வருது. இதுக்கு முன்னாடி இவன் வருவான் எதையாவது ஒளரிட்டு போய்டுவான். இப்போ இவ்ளோ தூரத்துக்கு இவன்  வரிஞ்சி கட்டிகிட்டு பேசுறான்னா அதுக்கு நீதான் காரணம் எனவும், நீ பேச வேண்டியதெல்லாம் அவனை வைத்து பேச வைக்குற என்றும் கூறுகிறார். 

அதற்கு மீனா,”அத்தை அவர் ஒன்னும் கத்தல.. பொறுப்பா கேள்வி கேட்கிறார். எந்த இடத்திலேயும் அவருக்காக அவரு பேசல மாமாவுக்கு தெரியாம நீங்க செஞ்ச விஷயத்துக்கு நியாயம் கேட்குறாரு என்கிறார். இப்போ என்ன சொல்ல வர்ற நீ நான் அவன பொறுப்பா வளர்க்கலனு சொல்லா வரியா என்று மீனாவை பார்த்து அவரின் அத்தை கேகிறார். அதற்கு முத்து அவ சொன்னதுக்கு இது பதில் இல்லையே. நீங்க தான் என்னை வளர்க்கவே இல்லையே பாட்டி தானே என்னை வளர்த்தாங்க என கூறுகிறார். அதனால் தான் நீ இப்படி இருக்க என அவரின் அம்மா கூறுகிறார். 

உடனே மீனா ஏன் அவருக்கு இப்போ என்ன குறைச்சல் ஏன் அவரை தாழ்த்தி பேசிக்கிட்டு இருக்கீங்க? என கேட்கிறார். பார்த்தீங்களா இப்படி தான் அவ பேசி பேசி அவன நமக்கு எதிரா மாத்திக்கிட்டு இருக்கா என்கிறார். பண்ற தப்பெல்லாம் நீங்க பண்ணிட்டு எதாச்சி திரிச்சி விடாதிங்க. மீனா மட்டும் உங்கள பைனான்சியர் அலவலகத்தில் பார்த்துட்டு சொல்லவில்லை என்றால் அவன் உங்கள பாத்திரம் தேய்க்க எங்கயாச்சி வித்திருப்பான் என்கிறார் முத்து.

அதற்கு விஜயா, என் மருமகளால தான் நான் தலை நிமிர்ந்து நிற்கிறேன் என்று ரோகினியை பார்த்து கூறுகிறார். ரோகினி உன்னால தான் மா இந்த வீட்டுக்கு பெருமை சேர போகுது என்றும் சொல்கிறார். மேலும் இப்போ நீ உங்க அப்பா கிட்ட பேசி இருக்க சீக்கிறமே அவரு இங்க வீட்டுக்கு வருவாருனு தான் நான் நினைக்கிறேன். அப்படியே அவருகிட்ட சொல்லி மனோஜ்க்கு ஒரு பிஸ்னஸ் ஸ்டார்ட் பன்னி கொடுக்க சொல்லு. எத்தனை நாளைக்கு தான் அவனும்  வேலை இல்லாமல் இருப்பான் என ஒரு ப்ளோவில் உண்மையை உளறி விடுகிறார் விஜயா. 

உடனே விஜயாவின் கணவர் அவரிடம் இப்போ அவன் வேலைக்கு போய்க்கிட்டு தானே இருக்கான் என்று கேட்கிறார். அதற்கு விஜயா ஆமா ஆவன் வேலைக்கு போய்க்கிட்டு தான் இருக்கான். ஆனா அவன் படிப்புக்கேத்த வேலை இல்லாமதானே இருக்கான் என்று கூறி சமாளிக்கிறார். மனோஜ் படிச்சிருக்க படிப்புக்கு அவன் பெரிய பில்டிங்கோட டாப்புல உட்கார்ந்து தான் வேலை செய்யணும் என்கிறார் விஜயா. இதை முத்து வழக்கம் போல் கலாய்க்கிறார். 

முத்து, பணத்தை கொடுத்துட்டோம் இதுக்கு மேல அவரை அப்படியெல்லாம் பேசாதிங்க என்கிறார் ரோகினி. அதற்கு முத்து இந்த பணத்த கொடுத்தா போதுமா உங்க அப்பாகிட்ட சொல்லி உன் புருஷன் தூக்கிட்டு ஓடுனான் பார்த்தியா 27 லட்ச ரூபாய் பணம் அதையும் வாங்கி கொடுத்திடு மா என்கிறார் முத்து. அப்படி மட்டும் நீ பன்னிட்டா நா உனக்கு பெரிய பேனர் வைக்கிறேன் என்கிறார். 

அந்த பணத்தை மனோஜ் சம்பாதித்து கொடுக்க போகிறான் என்றும், இனி யாரும் எந்த கேள்வியும் கேட்க கூடாது என்றும் கூறுகிறார் விஜயா. பின் விஜயாவின் கணவர் யாரும் நம்மை கேள்வி கேட்க கூடாது என்றால் நாம் செய்யும் செயல் சரியாக இருக்க வேண்டும் என்கிறார்.  பின்பு குடும்பத்துடன் அனைவரும் பைனான்சியரிடம் சென்று பணத்தை கொடுத்து பத்திரத்தை மீட்கின்றனர். 

பத்திரத்தை கொடுத்ததுடன் பைனான்சியார் தங்க வளையலை எடுத்து விஜயாவிடம் கொடுக்கிறார். அவர் கொடுத்த அதே வளையல் டிசைனில் விஜயா கையில் வேறொரு வளையளை அணிந்திருப்பதால், குடும்பத்தினர் அந்த வளையலை பைனான்சியரிடம் கொடுத்து எது ஒரினினல் என்று பார்க்க சொல்கின்றனர். அதில் ஒரு வளையல் டியூப்ளிகேட் என்பதை பைனான்சியர் கண்டிபிடிக்கிறார். இந்த வளையல் உங்களிடம் எப்படி வந்தது என விஜயாவின் கணவர் கேட்க போன மாசம் வட்டி கட்ட முடியாததால் அவங்க தான் கொடுத்தாங்க என்கிறார் அவர். 

ஒருவழியாக அங்கிருந்து அனைவரும் வீடு வந்து சேருகின்றனர். ரோகினிக்கு மீனாவுக்கும் ஒரு குட்டி க்ளாஷ் ஏற்படுகிறது. உடனே முத்துவின் அப்பா போதும் இனிமேலாவது இந்த பத்திரத்தை பத்திரமா வைச்சிரு என கூறி பத்திரத்தை மீனாவிடம் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
Embed widget