விருச்சிக ராசியை வம்பிழுத்த பிரியங்கா... ‛ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா’ ரகளை!
Oo Solriya Oooohm Solriya: சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக இந்த வாரமும் "ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா" நிகழ்ச்சியில் அதே போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகும்.
விஜய் டிவியின் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ என அனைத்துமே சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவரும். இந்த நிகழ்ச்சிகளுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருப்பினும் முன்னணியில் இருக்கும் பிரபலமான தொகுப்பாளர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர்கள் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள் என்றால் அந்த நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக இருக்கும்.
ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா :
அந்த வகையில் சமீப காலமாக ஞாயிறுகளை குஷியாக்க ஒளிபரப்பாகும் கேம் ஷோ "ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா" நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள் நம்முடைய ஃபேவரட் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா. யெஸ் ஆர் மிஸ் என்பது தான் இந்த கேம் ஷோ. ஒவ்வொரு வாரமும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடும் இந்த நிகழ்ச்சி ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது போன்ற வித்தியாசமான கலகலப்பான இன்ட்ரஸ்டிங் ரியாலிட்டி ஷோக்கள் வேறு எந்த ஒரு சேனல்களிலும் பார்க்க முடியாது என்பது தான் விஜய் டிவியின் ஸ்பெஷாலிட்டி.
#Priyanka and #MaKaPa are such friendship goals ❤️
— Thoughts (@Thoughts_s_s) February 6, 2022
Vaalkaila oru friend erunthalum Ipdy erukkanum!🥺
The one who walks in when rest of the world walks out!
Stick by our side through thick and thin!
Tease us mercilessly & also hype us like there’s no end!
Stay blessed you two🤗 pic.twitter.com/Xr6AZ4dEWo
சென்ற வார தொடர்ச்சி:
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் "ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா" நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்கள் "குக் வித் கோமாளி" சீசன் 3 பிரபலங்களான கிரேஸ், விதுலேகா மற்றும் பாலா. சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக இந்த வாரமும் அதே போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த வாரமும் பாலா "ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா" நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்பதால் ஸ்வாரஸ்யத்திற்கும் பஞ்சிற்கும் குறைவே இருக்காது. இந்த நிகழ்ச்சி ஞாயிறுகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த எபிசோடை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் முழுமையாக காணலாம். காணாதவறாதீர்கள் !!! இந்த வாரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் சில கிளிப்பிங்கள் இதோ உங்களுக்காக :
இது என்னயா புதுசா இருக்கு 😧 #OoSolriyaOoOohmSolriya! - ஞாயிறுகளில் இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. முழுப்பகுதி - https://t.co/8EOlVqrAor #VijayTelevision pic.twitter.com/EVpsB4Nsgd
— Vijay Television (@vijaytelevision) October 7, 2022