மேலும் அறிய
KPY Bala: கண்ணு பட்டுருச்சு...சுத்திப்போடுங்க பாலா.. கைவிரல் உடைந்த KPY பாலா.. ஆறுதல் சொல்லும் நெட்டிசன்கள்..
KPY Bala: கை விரல் எலும்பு உடைந்த புகைப்படத்தை பகிர்ந்த பாலா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “ மனம் நிறைந்தது, விரல் உடைந்தது” என பதிவிட்டிருந்தார்

kpy பாலா
KPY Bala: KPY பாலா மிக்ஜாம் புயலுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ததால், அவரது கை விரல் உடைந்ததா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான KPY நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் KPY பாலா. அண்மையில் சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலா செய்த உதவி இணையத்தில் வைரலானது.
200 ஏழைக் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் என 2 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக கொடுத்தார். இது மட்டும் இல்லாமல் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் பாலா நிதியுதவி வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக இலவச ஆம்புலன்ஸ் வாங்கி விடுவது, முதியோர் இல்லத்துக்கு உதவி செய்வது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பாலா செய்து வருகிறார்.
இந்த நிலையில் கை விரல் எலும்பு உடைந்த புகைப்படத்தை பகிர்ந்த பாலா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில், “ மனம் நிறைந்தது, விரல் உடைந்தது” என பதிவிட்டிருந்தார். பாலாவின் இந்த பதிவுக்கு அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு பாலா உதவி செய்ததால் அவரது விரல் உடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அதில், ஒரு ரசிகர்கள் உங்களுக்கு கண்ணு பட்டு விட்டது பாலா...அம்மாவிடம் சொல்லி சுத்திப்போட சொல்லுங்க” என கூறியுள்ளார்.
View this post on Instagram
காரைக்காலை சேர்ந்த பாலா விஜய் டிவியில் ஒளிபரப்பான KPY நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். 2017ம் ஆண்டு ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற பாலா, பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். எனினும், பாலா பங்கேற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா படத்தில் பாலா திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பிகினிங், ரன் பேபி ரன், தில் இருந்தா போராடு, ரா ரா சரசுக்கு ரா ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: Vaaranam Aayiram Rerelease: சூர்யா - கௌதம் மேனன் ரசிகர்கள் ஸ்வீட் எடுங்க.. மீண்டும் திரைக்கு வரும் ‘வாரணம் ஆயிரம்’!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement