Vijay tv baakiyalakshmi Serial : டைவர்ஸ் உண்மையை தெரிந்துகொண்ட பாக்கியலட்சுமி.. கோர்டில் சிக்கிக்கொண்ட கோபி..!
ஒரு பக்கம் பாக்கியலட்சுமியின் கணவர் கோபி, எப்படியாவது பாக்கியலட்சுமியிடம் இருந்து டைவர்ஸ் வாங்கி விட வேண்டும் என்றும் குடும்ப நல நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் பாக்கிய லட்சுமி சீரியலும் ஒன்று. இந்த சீரியலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு நிலவுகிறது. ஒரு பெண் தனது வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் சந்திக்கும் சவால்களை கொண்டு இந்த சீரியலின் கதை பின்னப்பட்டுள்ளது.
தற்போது, அந்த சீரியலில் பரபரப்பான எபிசொடுகள் இந்த வாரம் ஓடி கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் பாக்கியலட்சுமியின் கணவர் கோபி, எப்படியாவது பாக்கியலட்சுமியிடம் இருந்து டைவர்ஸ் வாங்கி விட வேண்டும் என்றும் குடும்ப நல நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறார். தனக்கு பாக்கியலட்சுமி வேண்டாம் என்றும், ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் கோபி, விவாகரத்து பெற வெகுளியாக இருக்கும் பாக்கியலட்சுமியிடம் ஏதோதோ காரணங்களை சொல்லி குடும்ப நல நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறார்.
ஏதோ ஜாலியாக பிக்னிக் செல்லும் குழந்தைபோல் துள்ளிகுதித்து போகும் பாக்கியலட்சுமி, அங்கு கூட்டம் கூட்டமாக நிற்கும் ஜோடிகளை பார்த்து இவங்க ஏன் இங்க வந்து இப்படி நிற்குறாங்க என்று கேள்வி கேட்கிறார். அதற்கு வக்கீலும் ஆமா என்று தலையாட்ட, இவங்கள எப்படியாவது சேர்த்து வைங்க என்று சொல்லும்போது ஒரு ப்ரோமோ முடிகிறது.
View this post on Instagram
இதைபார்த்து காண்டான நமது நெட்டிசன்கள், ஏம்மா வெகுளியா இருக்கலாம் ஆனா இவ்வளவு வெகுளியா இருக்க கூடாது. கல் ஆனாலும் கணவர், புல் ஆனாலும் புருஷனு அவன் என்ன சொன்னாலும் நம்புறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து, நமது வீட்டு தாய்மார்கள் அடியே பாக்கியம் அவன் உன்ன அத்து விட பாக்குறான் டி. கோபியை நம்பாத என்று பாக்கியலட்சுமிக்கு சப்போர்ட்டாக நிற்கிறார்கள். இறுதியில் என்னமோ ஏமாறபோவது டார்லிங் ராதிகாதான் என்று இளம் ரசிகர் படை கண் கலங்கி நிற்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















