The Goat : சென்ஸார் சான்றிதழ் பெற்றது விஜயின் தி கோட்...படம் எவ்வளவு நேரம் தெரியுமா?
The Goat : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்திற்கு சென்ஸார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது
தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரசாந்த், பிரபு தேவா , சினேகா , லைலா ,மோகன் , மீனாக்ஷி செளதரி , வைபவ் , பிரேம்ஜி , ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
தி கோட் ஆடியோ லாஞ்ச்
தி கோட் படத்தின் இசை வெளியீடு குறித்த பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. குறிப்பாக நடிகர் விஜய் தனது கட்சிக் கொடியை அறிவித்து அடுத்தடுத்த கட்சிப் பணிகளுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில் தி கோட் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடக்குமா என்கிற சந்தேகம் இருந்து வருகிறது. இது குறித்து படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இப்படி கூறினார்
" பிகில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை கடைசி ஒரு வாரத்தில் தான் திட்டமிட்டோம். தி கோட் படத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கிறது. நாங்கள் படத்தை முடித்து டெலிவரி கொடுத்த பின்புதான் அதைப் பற்றிதான் திட்டமிட வேண்டும். இன்னும் நாங்கள் இது பற்றி நாங்கள் எந்த அரங்கத்திடமும் பேசவில்லை. இன்னும் விஜய்யிடமே நாங்கள் இதைப்பற்றி பேசவில்லை. அவரிடம் கேட்டு அவர் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் செய்வோம். ஆடியோ லாஞ்ச் இருக்கா? இல்லையா? என்று இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமக தகவலை வெளியிடுவோம்" என்று அவர் கூறினார்
தி கோட் படத்தின் சென்ஸார் சான்றிதழ்
#GOAT — U/A with runtime 2 hours 59 mins. pic.twitter.com/rjv74XBtIh
— LetsCinema (@letscinema) August 23, 2024
தற்போது தி கோட் படத்தின் சென்ஸார் சான்றிதழ் பணிகள் நடந்து முடிந்துள்ளன. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சென்ஸார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. கடைசிக்கட்ட பணிகள் முடிந்து தி கோட் படம் 2 மணி நேரம் 59 நிமிடங்களுக்கு வெட்டப்பட்டுள்ளது.