(Source: ECI/ABP News/ABP Majha)
The GOAT Special Show: கொளுத்துங்கடா வெடிய...தி கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
விஜயின் தி கோட் படத்திற்கு தமிழக திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது
தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் நாளை வெளியாக இருக்கிறது. தமிழ் , மலையாளம் , கன்னடம் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. தமிழ்நாடு தவிர்த்து கேரளா மற்றும் தெலங்கானாவில் தி கோட் படத்திற்கு அதிகாலை 5 மணி சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன. தமிழகத்தில் கோயம்புத்தூரில் ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே காலை 7 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது.
A big thank you to our Tamil Nadu Government and @Udhaystalin Na for granting special shows and extending the show time and supporting cinema as always 🙏 @Ags_production pic.twitter.com/nG5XLwbJjZ
— Archana Kalpathi (@archanakalpathi) September 4, 2024
தமிழகத் திரையரங்கைப் பொறுத்தவரைஅதிகாலை 9 : 30 முதல் 10 மணிக்கு முதல் காட்சிகளுக்கான முன்பதிவுகள் தொடங்கின. தற்போது தி கோட் படத்திற்கு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதி காலை 9 மணி சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கூட்ட நெரிசலில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க காவல் துறையுடன் சேர்ந்து திரையரங்க நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அரசு சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.
தி கோட் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதற்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.