Leo Making Video : ஓராண்டை நிறைவு செய்த விஜயின் லியோ...படக்குழு பகிர்ந்த் மேக்கிங் வீடியோ
விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு கடந்துள்ள நிலையில் 7 நிமிடம் நீளமுள்ள மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் லியோ. மாஸ்டர் படத்திற்கு பின் இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணி இப்படத்தில் இணைந்தது. மாஸ்டர் படத்தில் விஜயை ஒரு புது லுக்கில் லோகேஷ் கனகராஜ் காட்டியிருந்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால் லியோ படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 18 ஆண்டுகளுக்குப் பின் விஜய் த்ரிஷா கூட்டணி , அனிருத் இசை , சஞ்சய் தத் , அர்ஜூன் , மிஸ்கின் , சாண்டி போன்ற நடிகர்கள் இப்படத்தில் இருந்தது என எல்லாமே எதிர்பார்ப்புகளை எகிற வைத்தன.
Every roar holds an untold story.
— Seven Screen Studio (@7screenstudio) October 19, 2024
Presenting you the #TheChroniclesOfLeo ▶️https://t.co/W0JECL0yIm#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @Jagadishbliss @manojdft @philoedit @SonyMusicSouth @NetflixIndia @SunTV… pic.twitter.com/zMNKuSwoH7
லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படம் வெளியாகி இன்றும் ஓராண்டு நிறைவடைந்துள்ளன. இதனைக் கொண்டாடும் விதமாக 7 நிமிடம் நீளமுள்ள லியோ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. லியோ படத்திற்கு கடுமையான பனியில் 100 நாட்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் விஜய் டூப் இல்லாமல் அவரே நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர்கள் தவிர்த்து நூற்றுக்காணக்கானவர்கள் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளது.
தளபதி 69
விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஜெக்டே , பிரியாமணி , கெளதம் மேனன் , பிரகாஷ் ராஜ் , மமிதா பைஜூ , பாபி தியோல் , நரேன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.