Jana Nayagan: விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ஜனநாயகனுக்கு வந்த புது நெருக்கடி! என்ன தெரியுமா?
Jana Nayagan: கரூர் சம்பவத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் (Promotion) மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் (first single) வெளியீடு தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

Jana Nayagan: கரூர் சம்பவத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் (Promotion) மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் (first single) வெளியீடு தள்ளிப்போகும் என்று தெரிகிறது.
தள்ளிப்போகும் ஜனநாயகன் ப்ரோமோஷன்:
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, கெளதம் மேனன், மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி ஆகியோர் நடித்திருக்கினறனர். படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படம் முதலில் அக்டோபர் மாதம் வெளியாவதாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இதற்கு முக்கிய காரணம் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அதற்கு முன்னதாக தனக்கான தேர்தல் பிரச்சாரமாக இந்த படத்தை பயன்படுத்தலாம் என்று விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
கரூர் சம்பவம் எதிரொலி:
இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கும் விஜய் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரபடுத்தி இருந்தார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழகம் தழுவிய தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் பரப்புரை மேற்க்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 20 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களை பிரச்சாரம் செய்தார். இப்படி பிரச்சார பயணம் சூடுபிடித்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி எதிர்பாராவிதமாக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கியது. இச்சூழலில் தான் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஜனநாயகன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவில்லை. அதே நேரம் தீபாவளி அன்று வெளியிடப்படலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், கரூர் சம்பவத்தின் எதிரொலியாக இப்போது ஜனநாயகன் படம் தொடர்பான எந்தவொரு ப்ரோமோசனும் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயாராக இல்லை என்று சொல்கின்றனர் சினிமா வட்டாரங்களில். அதேபோல், ஜனவரி 9 ஆம் தேதி திட்டமிட்டபடி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.





















