விஜயின் ஜனநாயகன் படப்பிடிப்பு காட்சி இணையத்தில் லீக்...போலீஸ் லுக்கில் விஜய்
Jana Nayagan Leaked. : எச்.வினோத் இயக்கி விஜய் நடித்து வரும் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு காட்சி இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது

ஜனநாயகன்
நடிகர் விஜயின் கடைசி படமாக உருவாகி வருகிறது ஜன நாயகன். இந்த படத்திற்கு பின் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபட இருக்கிறார். இதனால் ஜன நாயகன் படத்திற்கு இந்தியளவில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. எச் வினோத் இந்த படத்தை இயக்குகிறார். பூஜா ஹெக்டே , பாபி தியோல் , மமிதா பைஜூ , பிரியா மணி , கெளதம் மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது
ஜன நாயகன் படப்பிடிப்பு காட்சி லீக்
ஜன நாயகன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பிற்காக விஜய் கொடைக்கானல் சென்று திரும்பினார். இந்நிலையில் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தில் விஜய் போலீஸ் உடை அணிந்து காணப்படுகிறார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஜய் போலீஸாக இருந்து பின் அரசியலுக்கு வரும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என முன்பு தகவல்கள் வெளியாகி இருந்தன. இப்படியான நிலையில் ஜன நாயகன் படப்பிடிப்பு காட்சி வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
Jana Nayagan Leaked Pic 😲😲😲😲😲😲😲😲😲😲🥳🥳🥳🥳🥳🥳#ThalapathyVijay #JanaNayagan pic.twitter.com/hnUQr1XPGP
— ragnar (@lavadaKunju) May 11, 2025





















