மேலும் அறிய

Vijay Sethupathi: மம்மூட்டியுடன் மாஸ் காட்டவிருக்கும் விஜய் சேதுபதி.. டர்போ 2ஆம் பாகத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

மலையாள நடிகர் மம்மூட்டி நடித்துள்ள டர்போ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஜா

விஜய் சேதுபதி தனது 50ஆவது படத்திற்கான ப்ரோமோஷன்களில் பிஸியாக இருக்கிறார். குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனமீர்த்த நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ளது மகாராஜா (Maharaja). இப்படத்தில் அனுராக் கஷ்யப், மம்தா மோகன் தாஸ், முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.ஏல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். வரும் ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மகாராஜா படத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் நிலையில், மலையாளத்தில் மம்மூட்டியுடன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் தகவல் வெளியாகி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

டர்போ

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகியுள்ள இரண்டாவது படம் டர்போ. வைசாக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவான இப்படம், கடந்த மே மாதம் வெளியானது. திரைக்கதையைப் பொறுத்தவரை வழக்கமான ஆக்‌ஷன் படங்களுக்கான பாணியை பின்பற்றி இருந்தாலும், மம்மூட்டி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடித் தீர்த்தார்கள். கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி இப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார். இந்த வில்லனை ஒழித்துக்கட்டி கடைசியில் படம் முடியும் தருணத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர் டர்போ படக்குழுவினர்.

வில்லனுக்கு எல்லாம் வில்லன் வில்லாதி வில்லன் என்பது போல் விஜய் சேதுபதியின் குரல் பயண்படுத்தப்பட்டிருந்தது. இந்த ட்விஸ்ட் சமீபத்தில் டர்போ படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. டர்போ படம் வசூல் ரீதியா ரூ.50 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. முந்தைய பாகத்தில் தெரிவித்தது போல் விஜய் சேதுபதி தான் இந்தப் படத்தின் முக்கிய வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget