மேலும் அறிய

மீண்டும் மிரளவைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்தா காணாம் கூட்டணி..பத்தா திரைப்பட விமர்சனம்

நடுவுல கொஞ்சம் பக்கத்தா காணாம் , சீதக்காதி ஆகிய படங்களைத் தொடர்ந்து பாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பத்தா

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் மற்றும் குழந்தை நட்சத்திரம் சாய் பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்தா’. 1980-களின் மெட்ராஸ் நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்க, எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். வழக்கமான கேங்ஸ்டர் கதையாக இல்லாமல், ஒரு ரவுடிக்கும் எட்டு வயது சிறுவனுக்கும் இடையே உருவாகும் எதிர்பாராத உறவை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது.

கதை

1980களின் சென்னையில் சாராய வியாபாரம் செய்து, அந்தப் பகுதியையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்ளூர் ரவுடியாக இருக்கிறார் பத்தா. அவரைப் பார்த்தாலே ஊரில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பயப்படும் அளவுக்கு அவரது பெயர் இருக்கிறது. அதே பகுதியில் வசிக்கும் எட்டு வயது பள்ளிச் சிறுவன் சாபரிக்கும் பத்தா மீது பயம். ஒரு சூழலில், சாபரியின் செயலால் பள்ளி கழிவறைக்குள் பத்தா எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொள்கிறார். அந்தச் சிறுவன்தான் தன்னை அங்கு மாட்டிவைத்தவன் என்பது பத்தாவுக்குத் தெரியாது; அதேநேரம், பத்தாவை விடுவிக்க வேண்டிய சூழலும் சாபரிக்கு உருவாகிறது. இதனால் இருவருக்கும் இடையே தொடர்ச்சியான சந்திப்புகள், பயம், நகைச்சுவை மற்றும் எதிர்பாராத நெருக்கம் உருவாகிறது. வெளியுலகில் அச்சுறுத்தும் ரவுடியாக இருக்கும் பத்தாவுக்கும், தனது உலகத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கும் சிறுவனுக்கும் இடையிலான இந்த உறவு, பத்தாவின் வாழ்க்கையிலும் குடும்பத்துடனான அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த ரவுடிக்கும் சிறுவனுக்கும் இடையே நடக்கும் எதிர்பாராத உறவும், அதனால் பத்தாவுக்குள் உருவாகும் மாற்றமும்தான் படத்தின் மையக்கதை.

விமர்சனம்

‘பத்தா’வின் சுவாரஸ்யமே ஒரு ரவுடியின் கதையை வழக்கமான கேங்ஸ்டர் திரைப்படமாக அணுகாமல், அவனுக்குள் இருக்கும் மனிதனை முன்னிறுத்துவதில் இருக்கிறது. ஒரு சிறிய சம்பவத்திலிருந்து தொடங்கும் கதை, மெதுவாக அந்த ரவுடிக்கும் சிறுவனுக்கும் இடையிலான உறவை மையமாக்குகிறது. குறிப்பாக, ஆரம்பத்தில் நகைச்சுவையாக இருக்கும் சூழல் பின்னர் உணர்வுப்பூர்வமான தளத்துக்கு மாறுவது இயல்பாக இருக்கிறது.

படத்தின் முதல் பாதியில் நகைச்சுவையும் உணர்வும் சரியான அளவில் கலந்திருக்கின்றன. கதையின் முக்கிய உறவு உருவாகும் விதம் சுவாரஸ்யமாக இருப்பதால் படம் எளிதாக பார்வையாளர்களை உள்ளே இழுக்கிறது. இரண்டாம் பாதியில் அந்த உறவின் தாக்கம் அதிகரிக்கும்போது படமும் உணர்வுப்பூர்வமான பாதைக்கு செல்கிறது. ஆனால் இதே இடத்தில் சில காட்சிகள் ஒரே சூழலைச் சுற்றி நீளுவதால் வேகம் சற்று குறைகிறது. சில பகுதிகளை சுருக்கியிருந்தால் திரைக்கதை இன்னும் இறுக்கமாக இருந்திருக்கும்.

1980-களின் மெட்ராஸ் பின்னணியும் படத்திற்கு தனித்துவமான தோற்றத்தை கொடுக்கிறது. கதையின் காலகட்டத்தை வெறும் பின்னணியாக வைத்திருக்காமல், அந்தக் காலத்து மனிதர்களின் வாழ்க்கை முறையிலும் காட்சிகளிலும் கொண்டு வந்திருப்பது கவனிக்க வைக்கிறது. ரவுடி என்ற அடையாளத்துக்குள் இருக்கும் மனிதனின் பாசம், குற்ற உணர்வு, பொறுப்பு ஆகியவற்றை படம் மெதுவாக வெளிப்படுத்துகிறது.

நடிப்பு

விஜய் சேதுபதிக்கு பத்தா கதாபாத்திரம் அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ரவுடிக்கான மிரட்டல், இயல்பான நகைச்சுவை, கோபம், பலவீனம் என வெவ்வேறு உணர்வுகளை ஒரே கதாபாத்திரத்துக்குள் கொண்டு வருகிறார். குறிப்பாக சிறுவனுடன் அவர் உருவாக்கும் கெமிஸ்ட்ரி படத்தின் முக்கியமான பலமாக இருக்கிறது. அதிகப்படியான ஹீரோயிசம் இல்லாமல் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப அவர் நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது.

சிறுவன் சாய் பிரித்விராஜ் படத்தின் மற்றொரு முக்கியமான பலம். விஜய் சேதுபதியுடன் இணைந்து வரும் காட்சிகளில் இயல்பாக நடித்திருப்பதுடன், உணர்வுப்பூர்வமான தருணங்களிலும் கவனத்தை ஈர்க்கிறார். லிஜோமோல் ஜோஸ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான இயல்பை கொடுக்கிறார்.

இசை மற்றும் தொழில்நுட்பம்

சாய் அபயங்கரின் இசை படத்தின் காலகட்டத்துக்கும் உணர்வுகளுக்கும் பொருந்துகிறது. குறிப்பாக பின்னணி இசை கதையின் முக்கியமான தருணங்களை அழுத்தமாக்குகிறது. எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவு 1980-களின் மெட்ராஸ் நகரத்தை திரையில் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பழைய காலகட்டத்தின் தோற்றத்தை காட்சிகளிலும் கதாபாத்திரங்களின் சூழலிலும் கொண்டு வந்திருப்பது படத்தின் உலகத்தை நம்ப வைக்கிறது. ரவுடியின் வாழ்க்கைக்குள் நுழையும் ஒரு சிறுவன் உருவாக்கும் எதிர்பாராத பாசத்தை வைத்து மனிதநேயத்தை பேசும் எளிமையான, உணர்வுப்பூர்வமான படம் ‘பத்தா’.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தா? நிறுவனம் கொடுத்த பரபரப்பு விளக்கம்!
ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தா? நிறுவனம் கொடுத்த பரபரப்பு விளக்கம்!
School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!
School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
Embed widget