Maharaja OTT Release: ஓடிடியில் வெற்றி நடை போட படையெடுக்கும் 'மகாராஜா'... எங்கு? எப்போது ? விவரம் உள்ளே
Maharaja OTT Release : விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி முதல் நெட்ஃபிக்ஸ் ஒடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என கொண்டாடப்படும் விஜய் சேதுபதி தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனக்கு கொடுக்காப்பும் கதாபாத்திரம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை வெகுசிறப்பாக எதார்த்தமாக செய்து முடிக்க கூடிய திறமையான கலைஞன். அவருக்கென தனி ஸ்டைல் ஒன்றை பாலோ செய்து ரசிகர்களின் மனங்களை வென்றுவிடுகிறார்.
திறமையான நடிகர்கள் :
சமீபத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக ஜூன் 14ம் தேதி வெளியான திரைப்படம் 'மகாராஜா'. 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமாக அறியப்பட்ட நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப் , அபிராமி, முனீஷ்காந்த், நட்டி நட்ராஜ் , பாரதிராஜா,சச்சினா நெமிதாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்து இருந்தார். ராம் முரல் மற்றும் நித்திலன் சுவாமிநாதன் இணைந்து எழுதிய வசனங்கள் அதிக கவனம் பெற்றன.
100 கோடி வசூல் :
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வந்தது. 25 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய மகாராஜா திரைப்படம் 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்து சாதனை படைத்தது. படத்தின் நடித்த அத்தனை நடிகர்களின் நடிப்பும் பாராட்டுகளை குவித்தது. நான் - லீனியர் ஜானரில் உருவானதால் ரசிகர்களை பதைபதைப்புடன் படத்தை ரசிக்க வைத்தது.
ஓடிடிக்கு தயாரான மகாராஜா :
தரமான திரைக்கதை கொண்ட படங்களை தமிழ் ரசிகர்கள் என்றுமே கொண்டாட தவறியதில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக விளங்கிய 'மகாராஜா' படத்தை திரையரங்கில் கொண்டாடிய மக்களுக்கு மேலும் விருந்து கொடுக்கும் வகையில் ஓடிடி வெளியாக தயாராகி விட்டது. வரும் ஜூலை 12ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. தரமான திரைக்கதை கொண்ட படத்தை நிச்சயம் மற்ற மொழி ரசிகர்களையும் கவரும்.
"லட்சுமி காணாம போனதும் மகாராஜாவோட வாழ்க்கை தலைகீழா ஆயிடுச்சு. தன்னோட வீட்டு சாமிய திருப்பி கொண்டுவர மகாராஜா எவ்ளோ தூரம் போவாரு? " என நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளம் அவர்களின் சோசியல் மீடியா பக்கம் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
விரைவில் ஓடிடியில் 'மகாராஜா' திரைப்படத்தை பார்க்க மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.