மேலும் அறிய
ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்த விஜய் சென்னை வந்தடைந்தார்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
மதுரை விமான நிலைய நுழைவு வாயிலிலேயே நிறுத்தி விமான நிலையத்திற்குள் வருபவர்களை சோதனை செய்து பயணிகள் மற்றும் விமான நிலைய அலுவலர்கள் பணியாளர்களை மட்டும் அனுமதித்தனர்.

நடிகர் விஜய்
Source : whats app
விஜயை காண வந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதைத் தொடர்ந்து விஜய் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
சூட்டிங் பணியில் விஜய்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 1-ம் தேதி மதியம் சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரை வந்தடைந்தார். அவரைக் காண்பதற்காக அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அன்று காலை முதலே மதுரை விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் விமான நிலைய நுழைவு வாயிலேயே விஜய் ரசிகர்களை தடுத்து நிறுத்தி பயணிகளை மட்டும் உள்ளே அனுப்பினர். அப்போது காவல்துறையினரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் இருபுறமும் அணிவகுத்து நின்று தலைவர் விஜயை பார்ப்பதற்கு உற்சாகத்துடன் காத்திருந்தனர். வழிநெடுகே வரவேற்பை பெற்ற விஜய் கொடைக்கானல் சென்றுவிட்டார். தொடர்ந்து கொடைக்கானலில் தனது சூட்டிங் பணிகளை முடித்துவிட்டு கிளம்பினார்.
விஜய் விமானம் மூலம் சென்னை கிளம்பினார்
மூன்று நாட்கள் படப்பிடிப்பு முடிந்து மீண்டும் சென்னை செல்வதற்காக, இன்று காலை தமிழக வெற்றிக்காக அனைவரும் விஜய் கார் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து புறப்பட்டார். தொடர்ந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். கடந்த முறை விஜய் சென்னையில் இருந்து வந்த போது அவரைக் காண மதுரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்ததால் சில சலப்புகள் ஏற்பட்டது. அதை தவிர்க்கும் பொருட்டு இந்த முறை மதுரை விமான நிலைய நுழைவு வாயிலிலேயே நிறுத்தி விமான நிலையத்திற்குள் வருபவர்களை சோதனை செய்து பயணிகள் மற்றும் விமான நிலைய அலுவலர்கள் பணியாளர்களை மட்டும் அனுமதித்தனர். விஜயை காண வந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதைத் தொடர்ந்து விஜய் விமான நிலையத்திற்குள் சென்று விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்து மீண்டும் காரில் கிளம்பினார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















