மேலும் அறிய

'பிகில்' படத்தை பார்த்தவாறே சிகிச்சை எடுத்துக்கொண்ட சிறுவன் - விஜய் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ் !

தனக்கு விஜய் வசனங்கள், பாடல்கள் அனைத்து தெரியும் என வலியிலும் விஜய் குறித்து ஆர்வமாக பேசியதால் , சிறுவன் விஜயின் தீவிர ரசிகர் என அறிந்துக்கொண்டனர் மருத்துவர்கள்.

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக பல குழந்தைகளின் ஃபேவரெட்டாகவும் இருந்து வருகிறார். அவ்வபோது தனது  குட்டி ஃபேன்ஸையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு விஜய் படத்தினை போட்டுக்காட்டி சிகிச்சை வழங்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் அந்த சிறுவனை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகில்' படத்தை பார்த்தவாறே சிகிச்சை எடுத்துக்கொண்ட சிறுவன் - விஜய் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ் !

 இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த 10 வயது சிறுவன் ஒருவர்   தூக்க கலக்கத்தில் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது.  இதனையடுத்து வாகனத்தை ஓட்டிச்சென்ற சிறுவனின் மாமா , அவரை அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைந்த்துச்சென்றுள்ளார். கண்களுக்கு கீழே மற்றும் நெற்றிப்பகுதியில் பலத்த காயம்  ஏற்பட்ட நிலையில், அதிக இரத்தம் வெளியாகியுள்ளது. இதனால் வலியில் துடித்துள்ளார் சிறுவன் . உடனடி சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சிறுவன் அழுதுக்கொண்டே ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. உடனே  சிறுவனிடம் கனிவாக பேசிய  தன்னார்வலர் ஜின்னா என்பவர்  ,  உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்க , சிறுவன் “ விஜய்” என பதிலளித்துள்ளார். மேலும் தனக்கு விஜய் வசனங்கள், பாடல்கள் அனைத்து தெரியும் என வலியிலும் விஜய் குறித்து ஆர்வமாக பேசியதால் , சிறுவன் விஜயின் தீவிர ரசிகர் என மருத்துவர்கள் அறிந்துக்கொண்டனர். 

பிகில்' படத்தை பார்த்தவாறே சிகிச்சை எடுத்துக்கொண்ட சிறுவன் - விஜய் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ் !
பிறகு மொபைல்போன் ஒன்றில் சிறுவனுக்கு பிடித்த ‘பிகில்’ படத்தை ப்ளே செய்து கையில் கொடுத்துள்ளனர். படத்தை ஆர்வமாக பார்த்த சிறுவனுக்கு மயக்க ஊசி செலுத்திய மருத்துவர்கள் பிறகு சிகிச்சையை தொடங்கியுள்ளனர். பலத்த காயம் ஏற்பட்ட இடங்களில் சிறுவனுக்கு 8 தையல்கள் போடப்பட்டுள்ளது. சில தினங்களில் பூரணமாக குணமடைந்த நிலையில் சிறுவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த செய்தி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்க வாயிலாக  வைரலாக பரவியதை அடுத்து , நடிகர் விஜயும் இது குறித்து கேட்டறிந்துள்ளார்.உடனே  தனது நிர்வாகிகளை அனுப்பி சிறுவன் குறித்த விவரங்களை சேகரித்து வர கூறியிருக்கிறார். ஆனால் மருத்துவமனையில்  சிறுவன் குறித்த முழுமையான விவரங்கள் இடம்பெறவில்லை. கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணும் தவறானதாக இருந்திருக்கிறது. இருந்தாலும் தீவிரமாக தேடிய  மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் அந்த சிறுவனின் உறவினர்கள் வீட்டை கண்டுபிடித்துவிட்டனர் .

இந்நிலையில் விஜய் விரைவில் அந்த குட்டி ஃபேனை சந்திக்க உள்ளாராம். மேலும் சாதூர்யமாக பேசி  சிகிச்சை வழங்கிய தன்னார்வலர் மற்றும் மருத்துவர்களையும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதனை கேள்விப்பட்ட  அவரது ரசிகர்கள் விஜய் எப்போதுமே தனது ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என கொண்டாடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget