மேலும் அறிய

Vijay Birthday: விஜய்க்கு ராசியில்லாத "வி" வரிசை படங்கள்..! வரலாற்றை மாற்றுமா வாரிசு...?

விஜய் திரையுலகில் இதுவரை வி வரிசையில் தொடங்கிய படங்கள் அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

விஜய் திரையுலகில் இதுவரை வி வரிசையில் தொடங்கிய படங்கள் அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

இந்திய திரையுலகின் பிரபல நடிகர் விஜய். இவரது 48வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவர் நடித்து வரும் தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டது. பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடபள்ளியின் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்திற்கு வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் ரசிகர்களுக்கு “வாரிசு” அவரது பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. ஆனால், நடிகர் விஜய்க்கு வி அல்லது வ வரிசையில் தொடங்கிய படங்கள் பெரியளவில் ஒர்க் அவுட் ஆகியுள்ளதா? இல்லையா? என்று பார்த்தால் அவரது திரையுலக வி வரிசை படங்கள் சற்று இறங்கு முகத்திலே உள்ளது.

"வ" வரிசை

நடிகர் விஜய் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக “வெற்றி” என்ற படத்தில் 1984ம் ஆண்டு  விஜயகாந்த் நாயகனாக நடித்த படத்தில் அறிமுகமானார். 1986ம் ஆண்டு வசந்த ராகம் என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Vijay Birthday: விஜய்க்கு ராசியில்லாத

பின்னர், நாளைய தீர்ப்பு படம் மூலமாக நாயகனாக அறிமுாகிய விஜய், 1995ம் ஆண்டு விஷ்ணு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்னர், 1996ம் ஆண்டு வசந்தவாசல் என்ற படத்தில் விஜய் என்ற கதாபாத்திரத்திலே நடித்தார்.

ராசியில்லாத "வி" சென்டிமெண்ட்

வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் இளைய தளபதியாக உருவெடுத்த பிறகு, 2003ம் ஆண்டு வசீகரா என்ற காதல் ரொமாண்டிக் படத்தில் பூபதி என்ற வேடத்தில் நடித்தார். 2009ம் ஆண்டு பிரபுதேவாவின் இயக்கத்தில் வில்லு என்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்தார். அதே ஆண்டு வேட்டைக்காரன் என்ற படத்திலும் நடித்தார். இதன் பின்னர், 2011ம் ஆண்டு வேலாயுதம் என்ற படத்தில் விஜய் நடித்தார். இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு வி ( ஆங்கிலத்தில்) வரிசையில் அதாவது வாரிசு படத்தில் நடிக்கிறார்.

Vijay Birthday: விஜய்க்கு ராசியில்லாத

விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிய பிறகு இதுவரை வ வரிசையில் தொடங்கும் 6 படங்களில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவற்றில், வேலாயுதம் படம் மட்டுமே வெற்றிப்படம் ஆகும். வசீகரா சுமாரான வெற்றியையே பெற்றது. விஜய்யின் திரை வரலாற்றில் வில்லுவும், வேட்டைக்காரனும் மிகவும் மோசமான தோல்விப்படமாக அமைந்தது. குறிப்பாக, வில்லு படம் அன்றே மீம்ஸ் கிரியேட்டர்களால் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகியது.

ராசியாகுமா வாரிசு..?

Vijay Birthday: விஜய்க்கு ராசியில்லாத

இந்த நிலையில், தற்போது விஜய் மீண்டும் வ வரிசையில் தொடங்கும் வாரிசு என்ற படத்தில் நடிக்கிறார். அவரது திரை வாழ்வில் இதுவரை பெரியளவில் கை கொடுக்காத வ வரிசை திரைப்படங்கள் என்ற வரலாற்றை வாரிசு படம் மாற்றுமா? அல்லது வாரிசும் அந்த கருப்பு வரலாற்றை தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Embed widget