மேலும் அறிய

Vijay Makkal Iyakkam: ஓரத்தில் அமர்ந்து தரத்தில் உயர்ந்த விஜய்: ‛வாக்காள பெருமக்களுக்கு நன்றி’ தெரிவித்தது மக்கள் இயக்கம்!

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி என அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது. அதேசமயம் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் மக்கள் இயக்கமும் குறிப்பிடத்தகுந்த இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 இடங்களில் வென்றனர்.

சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாத சூழலில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த வெற்றி அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நடிகர் விஜயை சந்திப்பதற்காக பனையூரில் இருக்கும் அவரது இல்லத்துக்கு சமீபத்தில் சென்றனர். அப்போது அவர்களை சந்தித்த விஜய் அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகளிடம் கேட்டு நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் கூறியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஊரக  உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாக்களித்த தமிழ்நாடு மக்களுக்கு விஜய் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

Vijay Makkal Iyakkam: ஓரத்தில் அமர்ந்து தரத்தில் உயர்ந்த விஜய்: ‛வாக்காள பெருமக்களுக்கு நன்றி’ தெரிவித்தது மக்கள் இயக்கம்!

வெற்றி வாகை சூடிய மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க மத்திய, மாநில மரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை தீர்க்கும் நல்வாழ்வு பணியினை விஜய் உத்தரவுப்படி செவ்வனே செயல்படுத்தி மக்கள் பணிகளை தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறே” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: ABP Nadu Exclusive: மக்கள் நீதி மய்யம் To விஜய் மக்கள் இயக்கம்...? பழ.கருப்பையா பளிச் பேட்டி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget