Actor Vijay: முழு நேர அரசியலுக்கு தயாராகும் விஜய் - இலவச சட்ட ஆலோசனை மையம் அறிவிப்பு
பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் துவங்கப்பட இருக்கிறது.
Actor Vijay: நடிகர் விஜய் மக்களுக்கு உதவிம் விதமாக இலவச சட்ட ஆலோசனை மையங்களை தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிப்பில் பிசியாக இருக்கும் வரும் விஜய், மற்றொருபுறம் அரசியலிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக அண்மையில் 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அதன்பிறகு ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டத்தை விஜய் பயிலகம் என்ற பெயரில் தொடங்கி நடந்து வருகிறது. சென்னை பனையூரில் நடைபெறும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டு வந்தது.
அந்த வகையில் ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்க இலவச சட்ட ஆலோசனை தொடங்க விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி, இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில், “ பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் துவங்கப்பட இருக்கிறது. முதல் கட்டமாக வடசென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி சார்பில் தன்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் இலவச சட்ட ஆலோசனை மையம் வரும் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு, பொதுச்செயலாளர் புஸ்ஸி N.ஆனந்து திறந்து வைப்பார். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் வெங்கட் , மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
விஜய் நடப்பில் உருவாகியுள்ள லியோ படம் வரும் 19ம் தேதி ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளது. அதேநேரம் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் படிக்க: Leo Release Date: ரிலீசுக்கு முன்னதாக ப்ரிமீயர் ஷோ.. அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகிறதா லியோ?