Vijay Makkal Iyakkam: தனி ஒருவனாக இல்லாமல் எங்கள் தலைவனாக வர வேண்டும் - விஜயை அரசியலுக்கு அழைத்த மதுரை மாணவி!
தனி ஒருவனாக இல்லாமல் எங்கள் தலைவனாக வர வேண்டும் என மதுரை அண்ணா நகரை சார்ந்த மாணவி ஷாஃபுல் ஹசீனா விஜய் முன்னிலையில் மேடையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனி ஒருவனாக இல்லாமல் எங்கள் தலைவனாக வர வேண்டும், நான் போடப் போகும் முதல் ஓட்டை வலிமையுள்ளதாக மாற்ற நீங்கள் தலைமை ஏற்க வேண்டும் சான்றிதழ் ஊக்கத்தொகை பெற்றுக் கொண்ட மதுரை அண்ணா நகரை சார்ந்த மாணவி ஷாஃபுல் ஹசீனா விஜய் முன்னிலையில் மேடையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் மேடையில் பேசியபோது, “என் பெயர் ஷாஃபுல் ஹசீனா. நான் மதுரையில் இருந்து வரேன். விஜய் அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட உண்மையான அண்ணாவாதான் நினைச்சிட்டு இருக்கேன். இவங்களோட படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். எவ்வளவு தடை வந்தாலும் அவங்க படம் வெற்றிகரமாக ஓடி பல கோடியை சம்பாதிக்கும். இவங்களோட படத்துல என்னை ரொம்ப ஆழமா பதிஞ்சது என்னன்னா..? ஒரு ஓட்டை பத்தி எவ்வளவு ஆழமா ஒரு பிள்ளைக்கு சொல்ற மாதிரி அவ்வளவு கருத்துகளை சொல்லி இருப்பாரு. அது என் மனசுல ஆழமா பதிஞ்சுருக்கு.
இனி வர அடுத்த வருசம் நான் போட போற ஓட்டு, எவ்வளவு முக்கியமானதுன்னு புரிஞ்சுகிட்டேன். அதுக்கு அண்ணா வரணும். எனக்கு அதுதான் ஆசை. அண்ணா நீங்க சினிமாவுல மட்டும் இல்ல, எல்லா பீல்டுலையும் வரணும். (அந்த ஏரியா, இந்த ஏரியா, அந்த இடம், இந்த இடம் ஆல் அரவுண்ட் கில்லியா இருக்கணும்). அதே மாதிரி நீங்க சொன்னிங்க இல்லையா ‘எல்லா புகழும் ஒருவனுக்கேன்னு’ அந்த பாட்டுல ‘நாளை நாளை என்று என்று இன்றே இழக்காதே’ அந்த வரி என் மனசுல இருந்தனால தான் உங்க கையால இந்த அவார்ட் வாங்கியிருக்கேன். நீங்களும் அரசியலுக்கு வரணும். என் மதிப்பான ஓட்டு உங்களுக்கு போடணும்.
எங்கள மாதிரி ஏழைகளுக்கு உங்களோட கருணை கையை கொடுத்த மாதிரி, இனி வர கூடிய எல்லாத்துக்கும் தனி ஒருவனாக இல்லாமல் எங்கள் தலைவனாக வர வேண்டும்,நான் போடப் போகும் முதல் ஓட்டை வலிமையுள்ளதாக மாற்ற நீங்கள் தலைமை ஏற்க வேண்டும்” என பேசினார்.
இறுதியாக, நடிகர் விஜய்யுடன் குடும்பத்துடனும், தனியாகவும் மதுரை மாணவி ஷாஃபுல் ஹசீனா புகைப்படம் எடுத்து கொண்டார்.