மேலும் அறிய

JanaNayagan : இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்! அட ஓப்பனிங்கே எம்.ஜி.ஆர் ரெஃபரன்ஸா!

JanaNayagan Leaked : விஜயின் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை அண்மையில் மறுதணிக்கை குழு பார்வையிட்டனர். தணிக்கை சான்றிதழ் பெற்று படம் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் வெளியாக இருந்த நிலையில் படத்தின் காட்சிகள் சமூக வலைதளத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்த நிகழ்வு  ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகளை வெளியிட்டவர்கள் மீதும் பகிர்பவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது 

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். அரசியல் கட்சி தொடங்கியது முதல் பல்வேறு விமர்சனங்களையும் சவால்களையும் விஜய் சந்தித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது.

வினோத் இயக்கத்தில் விஜயின் 69 மற்றும் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஜனவரி 9 ஆம் தேதி பொங்கலுக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுப்பு தெரிவித்தது. சொன்ன தேதியில் படத்தை வெளியிட பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியும் பயனில்லை. இதனால் தங்களது மனுவை வாபஸ் பெற்று படத்தை மறுதணிக்கை குழுவிற்கு அனுப்பியது.  கடந்த மார்ச் 17 ஆம் தேதி  ஜனநாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை குழு பார்வையிட்டது. தணிக்கை சான்றிதழ் பெற்றபின் சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனநாயகன் படத்தின் காட்சிகள் சமூக வலைதளத்தில் கசிந்துள்ளன. 

இணைய்த்தில் கசிந்த ஜனநாயகன் காட்சிகள் 

ஜனநாயகன் படத்தில் விஜயின் அறிமுக காட்சி சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. இந்த காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி. ஆரின் ரெஃபரன்ஸ் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் சட்ட விரோதமாக பகிர்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய்க்கு அடுத்தடுத்த அடி 

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அரசியல் கட்சி தொடங்கியது முதலாக விஜய் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார். விஜயின் அரசியன் பரப்புரையின் போது கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் சென்சார் பிரச்சனையால் தடைப்பட்டது. அடுத்தபடியாக விஜயின் மனைவி சங்கீதா விஜயிடம் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார். பிரபல நடிகை ஒருவருடன் விஜய்க்கு திருமணம் கடந்த உறவு இருப்பதாக சங்கீதா தனது விவாகரத்து மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதெல்லாம் விஜய்க்கு எதிரான அரசியல் சதியா ? தற்செயலா ? இந்த நிகழ்வுகளால் விஜய்க்கு மக்களிடம் ஆதரவு பெருகுமா , குறையுமா என்பதை தேர்தல் முடிவுகள் தான் தெரிவிக்கும் .

 

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
Embed widget