மேலும் அறிய

JanaNayagan : ஜனநாயகன் வழக்கை வாபஸ் வாங்கிய கேவிஎன்...கூடிய விரைவில் புது ரிலீஸ் தேதி

ஜனநாயகன் சென்சார் தொடர்பாக படக்குழு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்று படத்தை மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பியுள்ளது

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய தனி நீதிபதி பிடி ஆஷாவின் உத்தரவை தலைமை நீதிபதிகளின் அமர்வு ரத்து செய்தது. மேலும் சென்சார் குழுவின் முழு தரப்பையும் கேட்டு இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய தலைமை நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. தற்போது சென்சார் வழங்க கோரி படக்குழு தொடர்ந்த வழக்கை கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் திரும்பப் பெற்று படத்தை மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது. 

ஜனநாயகன் சென்சார் சர்ச்சை

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருந்து சென்சார் பிரச்சனையால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரசிகரக்ள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகினார்கள்.  முன்னதாக படத்தில் திருத்தங்களை பரிந்துரைத்து U/A சான்றிதழ் வழங்குவதாக கூறிய தணிக்கை வாரியம் படத்தை மறுதணிக்கை செய்ய முடிவெடுத்திருப்பதாக மாற்றி பேசியது இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பிடி ஆஷா ஜனநாயகன் படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. 

சர்ச்சைக்குரிய காட்சிகள்

ஜனநாயகன் படத்தில் இந்திய ராணுவம் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தங்களுக்கு புகார் வந்ததாகவும் இதனால் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை குழு தலைவர் முடிவெடுத்துள்ளதாகவும் தணிக்கை வாரியம் சார்பாக கூறப்பட்டது. மேலும் விளக்கமளிக்க போதுமான அவகாசம் வழங்கப்படாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும் கூறியது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து மறுவிசாரணைக்கு உத்தரவிட்டனர். 

சுத்தலில் விட்ட சென்சார்

பொங்கலுக்கு வெளியாக இருந்த ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒரு மாத காலம் தாமதமாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குள் படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என படக்குழு முயற்சித்து வருகிறது. அப்படி இல்லையென்றால் தேர்தல் முடிந்தபின்னரே ஜனநாயகன் படம் வெளியாக முடியும். இதனால் நீதிமன்ற விசாரணையில் காலத்தை வீணடிக்காமல் படத்தை மறுதணிக்கை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது ஜன நாயகன் படக்குழு

விரைவில் ரிலீஸ் தேதி

படத்தை பார்வையிடும் மறுதணிக்கை குழுவினர் இந்த வாரத்திற்குள் படத்திற்குள் படத்தை பார்வையிட்டு திருத்தங்களை பரிந்துரை செய்வார்கள். இந்த திருத்தங்களை மேற்கொண்டு படத்தை சமர்பிக்கும் பட்சத்தில் குழு  தணிக்கை சான்றிதழ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தணிக்கை வாரியம் கெடுபிடி கொடுத்தாலும் ஜனநாயகன் படக்குழு சட்டரீதியாக போராடி வந்தது. தாமதமானாலும் பரவாயில்லை என ரசிகர்கள் படக்குழுவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வந்தார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்  இதற்கு மேலும் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திப்போட முடியாது என்பதால் மறுதணிக்கைக்கு படக்குழு சம்மதித்துள்ளது. கூடிய விரைவில் ஜனநாயகன் புதிய ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம் 

தலைப்பு செய்திகள்

ஒரு வாரமா சோசியல் மீடியாவுல இதான் டிரெண்ட்...என்னடா இது சக்திக்கு வந்த சோதன
ஒரு வாரமா சோசியல் மீடியாவுல இதான் டிரெண்ட்...என்னடா இது சக்திக்கு வந்த சோதன
பேசுனாலும் பிரச்சன..பேசலனாலும் பிரச்சன...மனம் வருந்திய ரஜினிகாந்த்
பேசுனாலும் பிரச்சன..பேசலனாலும் பிரச்சன...மனம் வருந்திய ரஜினிகாந்த்
சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !
சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !
ஜூன் 26 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’.
ஜூன் 26 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’.

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
New Tata Altroz Turbo CNG: நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
Embed widget