மேலும் அறிய

சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !

புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”.

இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது.

வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிககையாளர் சந்திப்பு இன்று சென்னையில் படக்குழுவினர் மற்றும் பத்திரிககை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தை உருவாக்கிய பயணம், பிரம்மாண்டமான தயாரிப்பு அம்சங்கள், மிதாலஜிக்கல் உலகத்தின் தனித்துவம் மற்றும் ரசிகர்களுக்காக காத்திருக்கும் திரை அனுபவம் குறித்து படக்குழு பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் அஜய் ரத்னம் பேசியதாவது

“அனைவருக்கும் வணக்கம். ‘நாகபந்தம்’ திரைப்படத்தின் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய ஆளுமைகளான கலைப்புலி எஸ். தாணு சார் மற்றும் ஏ எம் ரத்னம் சார் ஆகியோரின் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயம்.

கலைப்புலி தாணு சார் பகிர்ந்த அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. நாகத்தை மையமாகக் கொண்ட கதைகள் மற்றும் திரைப்படங்கள் எப்போதும் மக்களிடம் தனி வரவேற்பைப் பெற்றுள்ளன. சிவபெருமானுடன் தொடர்புடைய நாகம் என்றாலே மக்களிடம் ஒரு தனி ஈர்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அந்த வகையில் ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இயக்குநர் அபிஷேக் நாமா பற்றி பேச வேண்டும். அவர் வெறும் இயக்குநர் மட்டுமல்ல. சினிமாவிற்கு முதலில் விநியோகஸ்தராக வந்து, பல இந்திய மற்றும் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட்டவர். ஒரு படம் ஏன் வெற்றி பெறுகிறது, ஏன் தோல்வியடைகிறது என்பதை ஆழமாக ஆராய்ந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. அதன் பிறகு தயாரிப்பாளராக பல படங்களை உருவாக்கினார். இன்று இயக்குநராக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக அவர் பெற்ற அனுபவத்தின் மொத்த வெளிப்பாடாகவே ‘நாகபந்தம்’ உருவாகியுள்ளது.

நாயகன் விராட் கர்ணா இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். அவருடைய கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் திரையில் தெளிவாக தெரிகிறது. சினிமாவில் உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.

நபா நடேஷ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ஜெகபதி பாபு சார், சரண்யா மேடம் மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சௌந்தர் ராஜன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இன்று இந்திய சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தொழில்நுட்பக் கலைஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவது பெருமைக்குரிய விஷயம். இந்திய சினிமாவின் வளர்ச்சியில் தமிழ் சினிமாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக ‘நாகபந்தம்’ ஒரு மிகச் சிறந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இறைவனின் அருளால், குறிப்பாக முருகப்பெருமானின் அருளால், இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கிறேன். நன்றி.

நடிகர் ஜான் கொக்கேன் பேசியதாவது

“அனைவருக்கும் வணக்கம். புராணக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களை நாம் ஏற்கனவே நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் மிகப்பெரிய பொருட்செலவில், உலகத் தரத்தில், பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள புராணப் பின்னணியிலான திரைப்படமாக ‘நாகபந்தம்’ அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் அபிஷேக் நாமா அவர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் தயாரிப்பாளர்கள் நிஷிதா மேம் மற்றும் கிஷோர் சார் ஆகியோருக்கும் என் நன்றிகள். குறிப்பாக கிஷோர் சாருக்கு இந்தப் படம் குறித்து மிகப்பெரிய கனவும் தெளிவான பார்வையும் இருந்தது. அந்தப் பார்வையின் வெளிப்பாட்டை நீங்கள் டிரெய்லரிலேயே பார்த்திருப்பீர்கள்.

‘நாகபந்தம்’ ஒரு மிகப்பெரிய காட்சிப் பிரம்மாண்டம் கொண்ட திரைப்படம். தற்போது ஓடிடி காலகட்டமாக இருந்தாலும், இப்படிப்பட்ட திரைப்படங்களை சிறிய திரையில் முழுமையாக ரசிக்க முடியாது. இந்தப் படத்தை கட்டாயம் திரையரங்கின் பெரிய திரையில் பார்த்தால்தான் அதன் உண்மையான அனுபவத்தை உணர முடியும்.

டிரெய்லரில் நீங்கள் பார்த்ததுபோல, நாகபந்தம், பிரம்மகமலம் மற்றும் அதனைச் சுற்றிய மர்மங்கள் கதையின் மையமாக இருக்கின்றன. நாயகன் விராட் கர்ணா அந்த மர்மத்தைத் தேடும் பயணத்தில் செல்லும்போது, பார்வையாளர்களும் அவருடன் இணைந்து அந்தப் பயணத்தை அனுபவிப்பார்கள். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்தத் தேடலின் ஒரு பகுதியாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. பிரம்மாண்டமான செட்கள், மிகப்பெரிய தயாரிப்பு மதிப்பு மற்றும் திறமையான கலைஞர்கள் கொண்ட குழுவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நாபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், அனசுயா, ஜான் விஜய், சரண்யா மேடம் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இது ஒரு அர்ப்பணிப்பான குழுவின் கடின உழைப்பில் உருவான மிகப்பெரிய திரைப்படம். வரும் ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று ‘நாகபந்தம்’ திரைப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நடிகை நபா நடேஷ் பேசியதாவது

“அனைவருக்கும் வணக்கம். முதலில் கலைப்புலி எஸ். தாணு சார் மற்றும் ஏ எம் ரத்னம் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை.

‘நாகபந்தம்’ திரைப்படம் வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது சாதாரணமான திரைப்படம் அல்ல. நமது வரலாறு, மர்மம், சாகசம், ஆக்சன், திரில்லர் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவம்.

இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. படத்தின் கதையும், உருவாக்கப்பட்ட உலகமும் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும். டிரெய்லருக்கு நீங்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? அதேபோல் படம் முழுவதும் உங்களை கவரும் என்று நம்புகிறேன். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து ‘நாகபந்தம்’ திரைப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.”

நடிகர் விராட் கர்ணா பேசியதாவது

“அனைவருக்கும் வணக்கம். இன்று ‘நாகபந்தம்’ திரைப்படத்தின் புரமோஷனுக்காக இங்கு வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஊடக நண்பர்கள், படக்குழுவினர் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி. குறிப்பாக எங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தப் படத்தை உருவாக்கிய அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆன்மிகம் மற்றும் பக்தி சார்ந்த விஷயங்களில் அதிகமாக ஈடுபட ஊக்குவித்து வருகிறார்கள். ஏனெனில் அது மனதிற்கும் உடலுக்கும் அமைதியையும் சக்தியையும் அளிக்கிறது. ‘நாகபந்தம்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவமும் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை முடித்த பிறகு நான் ஆன்மிக ரீதியாகவும், மனதளவிலும் மிகவும் வலிமையாக உணர்கிறேன்.

இந்தப் படம் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், தைரியம், கோவில்களின் மரபு மற்றும் நமது தொன்மையான நாகரீகத்தின் பல அம்சங்களை பேசுகிறது. நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்தப் படம் இருக்கும்.

‘நாகபந்தம்’ திரைப்படத்தில் நான் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு அறிமுக நடிகராக இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளேன். டிரெய்லருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

வரும் ஜூலை 3 ஆம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. டிரெய்லருக்கு நீங்கள் கொடுத்த அதே அன்பையும் ஆதரவையும் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

நான் கொஞ்சம் பதட்டமாக இருப்பதால் ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். சென்னை மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget