மேலும் அறிய

’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!

இழிவான பதிவுகளை வெளியிடுவதன் மூலம் தங்களது தரத்தை தான் அவர்கள் தாழ்த்திக் கொள்கிறார்களே தவிர, எக்காலத்திலும் எங்களை விமர்சனத்தின் மூலம் வெல்ல முடியாது- அமைச்சர் விஸ்வநாதன்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குறிப்பாக, தலித் சமுதாயத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கிற என்னை குறிவைத்து, இழிவுபடுத்தி பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சாடி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ன் 56-வது பிறந்தநாள் விழா, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் 52-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மேலூரில் புகையிலை, மது, கஞ்சா போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான ‘விரா” (விஜய் - ராகுல் ViRa) விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் 4 கி.மீ. தூரம் பங்கேற்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அந்த சிறுமிகளை மனிதாபிமான உணர்வோடு தொட்டு தூக்கி மயக்கத்தை போக்குகின்ற வகையில் தண்ணீரை தெளித்து முதலுதவி செய்தேன்.

இதற்கு பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்நோக்கம் கற்ப்பிக்கின்ற வகையில் இழிவுபடுத்தி, தி.மு.க. ஐ.டி. விங்கில் பதிவு செய்திருப்பது மிகவும் அநாகரீகமான செயலாகும்.

தமிழகத்தில் 60 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு முடிவுகட்டி, தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு இனி எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சிக்கே வர முடியாத அளவில் மிகச் சிறப்பான மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை முதலமைச்சர்  ஜோசப் விஜய் நடத்திக் கொண்டிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத வகையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு அமைந்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஊழலின் ஊற்றுக் கண்

கடந்த காலத்தில் அவர் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த போது ஊழலின் ஊற்றுக் கண்ணாக அந்த துறையை மாற்றி எத்தகைய லஞ்ச லாவண்யம் நடைபெற்றது என்பதை சமீபத்தில் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் விலாவாரியாக ஊடகத்தின் மூலம் அம்பலப்படுத்தியதற்கு இதுவரை எந்த பதிலும் கூறாத அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குறிப்பாக, தலித் சமுதாயத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கிற என்னை குறிவைத்து, இழிவுபடுத்தி பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

விமர்சனத்தின் மூலம் வெல்ல முடியாது

மேலும், தங்களது ஐ.டி. விங் மூலம் இழிவான பதிவுகளை வெளியிடுவதன் மூலம் தங்களது தரத்தை தான் அவர்கள் தாழ்த்திக் கொள்கிறார்களே தவிர, எக்காலத்திலும் எங்களை விமர்சனத்தின் மூலம் வெல்ல முடியாது என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். இனியும் இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்வார்களேயானால், அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
இனி காலை 6.30-க்கே பள்ளிகள் திறப்பு; எத்தனை நாட்களுக்கு?என்ன காரணம்?
இனி காலை 6.30-க்கே பள்ளிகள் திறப்பு; எத்தனை நாட்களுக்கு?என்ன காரணம்?
TNEA 2026: தள்ளிப்போகும் பொறியியல் சேர்க்கை; புது தரவரிசைப் பட்டியல் தேதியை அறிவித்த அமைச்சர்
TNEA 2026: தள்ளிப்போகும் பொறியியல் சேர்க்கை; புது தரவரிசைப் பட்டியல் தேதியை அறிவித்த அமைச்சர்
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
TNEA 2026: தள்ளிப்போகும் பொறியியல் சேர்க்கை; புது தரவரிசைப் பட்டியல் தேதியை அறிவித்த அமைச்சர்
TNEA 2026: தள்ளிப்போகும் பொறியியல் சேர்க்கை; புது தரவரிசைப் பட்டியல் தேதியை அறிவித்த அமைச்சர்
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
பட்ஜெட் விலை! ஒரே சார்ஜில் 120 கிலோமீட்டர் மைலேஜ் - Kinetic Green Flex இ ஸ்கூட்டர் வாங்கலாமா?
பட்ஜெட் விலை! ஒரே சார்ஜில் 120 கிலோமீட்டர் மைலேஜ் - Kinetic Green Flex இ ஸ்கூட்டர் வாங்கலாமா?
காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
Gold and silver rate today : உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
Embed widget