JanaNayagan : கடைசியாக ஒருமுறை குட்டி கதை... மலேசியாவில் பிரம்மாண்டமாக ஜனநாயகன் இசை வெளியீடு
JanaNayagan Audio Launch : விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது

எச் வினோத் இயக்கும் விஜயின் ஜனநாயகன் படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாக இருக்கிறது. ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு டிசம்பர் மாதம் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதே இந்த முக்கிய தகவல்
ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்
எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பாபி தியோல் , மமிதா பைஜூ , பூஜா ஹெக்டே , கெளதம் மேனன் , பிரியாமணி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் 'தளபதி கச்சேரி' அண்மையில் வெளியாகி பெரியளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது படம் வெளியாக இன்னும் 50 நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீடு குறித்த தகவல் இன்று மாலை வெளியாக இருக்கிறது
இதன்படி ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி டிசம்பர் மிக மிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெற இருக்கிறது. ஒரு நடிகராக விஜய் கடைசியாக ஒரு முறை தனது ரசிகர்களுடன் உரையாட இருக்கிறார்.
Selamat datang 😁
— KVN Productions (@KvnProductions) November 21, 2025
Watch this space at 5:30 PM today ✌🏻#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries #JanaNayagan#JanaNayaganPongal #JanaNayaganFromJan9 pic.twitter.com/j8SyLZY8xi
அரசியல் நெருக்கடி
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து விஜய்க்கு கடும் அரசியல் நெருக்கடிகள் இருந்து வருகின்றன. கரூரைப் போல் ஜனநாயகன் ஆடியோ லாஞ்சில் விபத்து ஏற்படாமல் இருக்க படத்தின் இசை வெளியீட்டை மலேசியாவில் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது





















