Happy Birthday Thalapathy Vijay : பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஆடியோ மெசேஜ் போட்டு அசத்திய தளபதி விஜய்..
பிறந்தநாளை ஒட்டி நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்காக ஒரு வாய்ஸ் மெசேஜ் வெளியிட்டுள்ளார். அதனால் அவரது ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர்.
பிறந்தநாளை ஒட்டி நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்காக ஒரு வாய்ஸ் மெசேஜ் வெளியிட்டுள்ளார். அதனால் அவரது ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர்.
தமிழ் திரையுலகில் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரான தளபதி விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவருடைய அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இது ட்விட்டரில் மிகவும் வைரலானது. அந்த வகையில் இன்று விஜயின் பிறந்தநாள் காரணமாக ட்விட்டரில் "#HBDThalapathyVijay" என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாக தொடங்கியுள்ளது.
இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரைப் பிரபலங்களும் தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ரசிகர்களுக்காக ஒரு ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு நீ நதி போல ஓடிக்கொண்டிரு என்று டைட்டில் தரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நம்ம எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு நதி போலத்தான் இருக்கும். ஒரு நதி ஓரிடத்தில் புறப்பட்டு அதோடு வழியில் வரும். அப்படி அந்த நதி ஓடும்போது, ஓரிடத்தில் அதை விளக்கேற்றி வரவேற்பார்கள். இன்னும் சில இடத்தில் நதி மீது பூப்போட்டு வரவேற்பார்கள். அப்பவும் நதிபாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கும். நதி ஓடும். அந்த நதியில் சிலர் கல்லை எறிவார்கள். பிடிக்காதவர்கள் நம் மீது கல் எறிவது போல். ஆனாலும் அந்த நதி பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கும். அந்த நதி மாதிரி தாங்க நம்ம வாழ்க்கையும். நம்ம வணங்குபவர்களும் இருப்பார்கள். வரவேற்பவர்களும் இருப்பார்கள். எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். அதனால் நாம் எல்லோரும் நதி போல் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த ஆடியோ மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Presenting you all our #ThalapathyBirthdaySpecialVideo ❤️#NeeNadhiPolaOdikondiru 🪔🌸🪨
— Seven Screen Studio (@7screenstudio) June 20, 2022
▶️ https://t.co/MXsguDgLzf
Celebrating #Thalapathy @actorvijay ❤️🔥 pic.twitter.com/dRfkEZLWD1
இந்த மெசேஜை இந்த செய்தியைப் பதிவிடும் போதே மூன்றரை லட்சத்துக்கும் மேலானோர் பார்த்து ரசித்துள்ளனர். விஜய் எப்போதும் ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி சொல்வது வழக்கம். ஆனால் கடைசியாக பீஸ்ட் ஆடியோ லாஞ்சில் அவர் அவ்வாறு ஏதும் சொல்லவில்லை. அதனால் இந்த ஆடியோ மெசேஜ் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வீடியோ இணைப்பு:
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படிப்பு சென்னையில் நடந்த நிலையில், 2 ஆம் கட்ட படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் 23 ஆம் தேதி நடிகர் விஜய் ஹைதராபாத்திற்கு சென்றார். அங்கு படப்பிடிப்பு விறுவிறுவென நடந்து வந்த நிலையில் அந்த படப்பிடிப்பு நடந்து முடிந்ததாக படக்குழு அண்மையில் அறிவித்து இருந்தது. இந்தப்படத்தில் நடிகர் விஜயுடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பிரபு, சியாம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது