விஜய் ரசிகன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு...ஒரே வீடியோவால் கொத்து கொத்தாக கலைந்த விஜய் ரசிகர்கள்
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவால் விஜயின் சொந்த ரசிகர்கள் பெரும் அதிருபதியை வெளிப்படுத்தி வருகிறார்கள்

கரூரில் தவெக அரசியல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விஜய் மூன்று நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் விஜய் பேசியிருப்பதால் அவரது சொந்த ரசிகர்களே பெரும் அதிருபதிக்கு உள்ளாகியுள்ளார்கள். விஜய் ரசிகனாக இருப்பதற்கு வெட்கப்படுவதாக பலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய் வீடியோவால் ரசிகர்கள் அதிருப்தி
தனது கட்சி பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் மக்கள் சிக்கி அவதிப்படுத்வதைக் கண்ட விஜய் உடனே விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது பெரியளவில் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இன்னொரு பக்கம் தவெக தொண்டர்கள் சதிக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரச்சனையை அரசு பக்கம் திசை திருப்பி வந்தனர். மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் உயிரிழந்தோரின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து வந்தபோதும் விஜய் கரூர் செல்லாதது அவரது ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளானது.
இப்படியான நிலையில் நேற்று விஜய் வீடியோ வெளியிட்டார். 41 பேர் உயிரிழந்தது குறித்து தனது வருத்தத்தை மட்டும் தெரிவித்துவிட்டு விஜய் தன்னையே பாதிக்கப்பட்டவராக வெளிக்காட்டிக் கொண்டார் . மேலும் மற்ற பரப்புரையின் போது நடக்காத அசம்பாவிதம் கரூரில் மட்டும் எப்படி நடந்தது என மறுபடியும் பிரச்சனையை திமுக பக்கம் திருப்பி விடும் விதமாக அவரது பேச்சு அமைந்தது. விஜயின் இந்த வீடியோ வெளியான பின் அவரது சொந்த ரசிகர்களே தங்களது அதிருப்தியை சமூக வலைதளத்தில் வெளிகாட்ட தொடங்கியுள்ளார்கள். விஜயின் ரசிகர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருப்பதாக பலர் பதிவிட்டு வருகிறார்கள்.
Used to be a proud #Vijay fan. Now it’s straight-up disgusting 🤮
— LeoBoy🇺🇸🇨🇦 (@CanadaBoy2023) September 30, 2025
Aruverupa iruku da no remorse, still spinning fake stories & speculations instead of owning up.
Such a selfish, heartless bastard. All that “good man” image pure acting.
Shame I ever admired this fraud. 💔 pic.twitter.com/0vRG3sRJgO
நடந்த விபத்திற்கு பொறுப்பேற்கவில்லை , தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தவில்லை . இதை எல்லாம் விட்டுவிட்டு நடப்பது எல்லாம் தனக்கு எதிரான சதி என்று விஜய் பேசியிருப்பதே பலரது அதிருப்திக்கு முக்கிய காரணம்.
#KarurTragedy #Vijay has released a video, hasn't called his fans to help, to respect the laws going forward, not bring children. None of that.
— OzTamil (@OzTamil2023) September 30, 2025
He simply said it's a conspiracy against him.
What a low!
What a disappointment!
Always been a fan. This incident changed it.





















