Kushi: உங்களுக்கு பெரிய மனசுதான்... ரசிகர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தரும் விஜய் தேவரகொண்டா!
'கஷ்டப்படும் ரசிகர்களின் 100 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் என ஒரு கோடி ரூபாய் வழங்க உள்ளேன்'
Kushi: குஷி படத்தின் வெற்றியால் 100 குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க உள்ளதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
சிவ நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்திருக்கும் குஷி திரைப்படம் வெளியாகி வசூலில் வெற்றிப்பெற்று வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசை அமைத்துள்ளார். ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்ற குஷி படம் இதுவரை ரூ. 70 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா, “ குஷி படத்தின் வெற்றியால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சில விஷயங்களை நான் நினைத்து வருகிறேன். அதை செய்யவில்லை என்றால் எனக்கு தூக்கம் வராது. என்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாக குஷி படத்தின் சம்பளத்தின் இருந்து ரூ. 1 கோடி ரூபாயை ரசிகர்களின் குடும்பத்திற்கு தர திட்டமிட்டுள்ளேன்.
கஷ்டப்படும் ரசிகர்களின் 100 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் என ஒரு கோடி ரூபாய் வழங்க உள்ளேன். என்னுடைய வெற்றி, மகிழ்ச்சி, ஊதியம் என அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் வழங்கும் பணத்தை சம்பந்தப்பட்ட குடும்பத்டினர் வீட்டு வாடகை அல்லது கல்வி செலவுக்கு பயன்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன். இந்த வேலையை முடித்தால் தான் படத்தின் வெற்றி எனக்கு முழுமையாகும்” என பேசியுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் இந்த முடிவை பலரும் வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Just IN: Vijay Deverakonda to give ₹1 lac each to 100 families in the next 10 days.
— Manobala Vijayabalan (@ManobalaV) September 4, 2023
Total - ₹ 1 cr
||#Kushi | #VijayDeverakonda|| pic.twitter.com/mpvGfO2t8H
காதல் கதையை கொண்ட குஷி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மணிரத்னத்தின் சாயல் கதையில் இருப்பதாக கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. காதலித்து திருமணம் செய்த பின்னர் இருவரும் சந்திக்கும் பிரச்சனையை கூறும் குஷி படம், மணிரத்னம் எடுத்த அலைப்பாயுதே படத்தின் சாயலும், காஷ்மீர், முஸ்லீம் பெண் போன்ற காட்சிகள் பம்பாய் படத்தின் சாயலும் இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. எனினும், 2 கே கிட்ஸ் விரும்பு காதல் படமாக குஷி இருப்பதால் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க: Jailer Success: வசூல் வேட்டையில் ஜெயிலர்.. 100 ஏழை குழந்தைகளுக்கான சர்ஜரிக்கு காசோலை வழங்கிய சன் பிக்சர்ஸ்
OTT Release: இந்த வாரம் ஓடிடியில் இவைதான்.. ஜெயிலர் முதல் குங் ஃபூ பாண்டா வரை டாப் ஹிட்ஸ் படங்கள்!